ஏற்காட்டில் தடையை மீறி கொண்டு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு
ஏற்காட்டில் தடையை மீறி கொண்டு வந்த பொக்லைன் எந்திரம் சிறைபிடிப்பு அனைத்து கட்சியினரின் திடீர் போராட்டத்தால் பரபரப்பு
ஏற்காடு,
ஏற்காடு மலைப்பகுதியில் பொக்லைன் எந்திரங்கள் மற்றும் டாரஸ் போன்ற கனரக வாகனங்கள் இயக்கவும், வெடிவைத்து பாறைகளை தகர்க்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தனியார் இடத்தில் மலைக்குன்றில் பாறைகளை வெடிவைத்து தகர்க்கவும், பொக்லைன் எந்திரங்களை பயன்படுத்தவும் தனியார் நிர்வாகத்தினர் நடவடிக்கை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இதையறிந்த ஏற்காடு ஒன்றிய அ.தி.மு.க., தி.மு.க., தே.மு.தி.க. உள்ளிட்ட அனைத்து கட்சியினர் இது தொடர்பாக ஏற்காடு தாசில்தாரிடம் நேற்று புகார் மனு கொடுத்தனர். மேலும் அந்த இடத்திற்கு சென்ற அனைத்து கட்சியினர் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து கட்சியினரின் இந்த போராட்டத்தால் அப்பகுதியில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. உடனே அங்கு விரைந்து வந்த தாசில்தார் சாந்தி, தனியார் நிர்வாகத்திடம் இது தொடர்பாக விசாரித்தார். அவர்கள், பொக்லைன் எந்திரம் பயன்படுத்த தடை உள்ளது குறித்து தெரியாமல் பணிகளை மேற்கொள்ள இருந்ததாக தெரிவித்தனர். இதையடுத்து பொக்லைன் எந்திரத்தை பயன்படுத்தக்கூடாது, வெடி வைத்து பாறைகளை தகர்க்கக்கூடாது என்று அவர்களை எச்சரித்ததாக தாசில்தார் சாந்தி தெரிவித்தார். இதையடுத்து அங்கிருந்து அனைத்து கட்சியினர் கலைந்து சென்றனர்.

Related Tags :
Next Story