பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து திருச்செந்தூரிலும், தூத்துக்குடியிலும் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திருச்செந்தூர்,
மத்திய அரசு பணமதிப்பிழப்பு நடவடிக்கை எடுத்து ஓராண்டு நிறைவு பெற்றது. இந்த அறிவிப்பு வெளியிட்ட தினத்தை கருப்பு தினமாக அறிவித்து, கருப்பு சட்டை அணிந்து மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த தி.மு.க. செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்திருந்தார்.
இதன்படி, திருச்செந்தூர் பகத்சிங் பஸ் நிலையம் முன்பு தூத்துக்குடி தெற்கு மாவட்ட தி.மு.க.வினர் நேற்று காலையில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.
முன்னாள் எம்.பி. எஸ்.ஆர்.ஜெயதுரை, மாநில மருத்துவ அணி துணை அமைப்பாளர் டாக்டர் வெற்றிவேல், முத்தையாபுரம் பகுதி யெலாளர் கருணாகரன், மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகபெருமாள், முன்னாள் மாணவர் அணி துணை அமைப்பாளர் ஜெகன்,
ஒன்றிய செயலாளர்கள் செங்குழி ரமேஷ் (திருச்செந்தூர்), மாடசாமி (தூத்துக்குடி), பாலசிங் (உடன்குடி), பார்த்தீபன் (ஆழ்வார்திருநகரி மேற்கு), நவீன்குமார் (கிழக்கு), ஜோசப் (சாத்தான்குளம்), நல்லமுத்து (கருங்குளம்), ரவி (ஸ்ரீவைகுண்டம் கிழக்கு), வைகுண்ட பாண்டியன் (மேற்கு), ஆறுமுகநேரி முன்னாள் நகர பஞ்சாயத்து தலைவர் கல்யாணசுந்தரம், நகர செயலாளர்கள் மந்திரமூர்த்தி, ராமஜெயம், ராஜசேகர், ஜான் பாஸ்கர், பார்த்தீபன், வரதராஜ் ஸ்டாலின், ரவி செல்வகுமார், முத்துராமலிங்கம், முன்னாள் கவுன்சிலர்கள் சுதாகர், கோமதிநாயகம், மணல்மேடு சுரேஷ், முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜனகர், காளிதாஸ் பண்ணையார், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட செயலாளர் முகமதுல் ஹசன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இதேபோன்று தூத்துக்குடி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் சிதம்பரநகர் பஸ் நிறுத்தம் அருகே நேற்று காலை கருப்பு சட்டை ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்துக்கு வடக்கு மாவட்ட தி.மு.க. பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெகன், மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் மீராசா, மாநில விவசாய அணி செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தி.மு.க.வினர் கருப்புச்சட்டை அணிந்து பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் மக்கள் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், இதனை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட அவைத்தலைவர் என்.கே.பெருமாள், துணை செயலாளர்கள் செந்தூர்மணி, ராஜ்மோகன்செல்வின், ஏஞ்சலா, மாவட்ட பொருளாளர் ரவீந்திரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் எம்.எல்.ஏ ராஜமன்னார், ஜெயக்குமார் ரூபன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் மதியழகன், மாணவர் அணி அமைப்பாளர் ஜான் அலெக்சாண்டர், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் கஸ்தூரிதங்கம், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் இந்துமதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story