மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர் மாவட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:57 AM IST)
t-max-icont-min-icon

மத்திய அரசை கண்டித்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் தி.மு.க., காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

பெரம்பலூர்,

பணமதிப்பிழப்பை கொண்டு வந்து நாட்டின் பொருளாதாரத்தை பின் னடைய செய்ததாக கூறி மத்திய அரசை கண்டித்து தி.மு.க. மற்றும் அதன் தோழமை கட்சிகள் சார்பில் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய லாளர் குன்னம் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் தமிழ்மாணிக்கம், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சுல்தான் மொய்தீன், இந்திய முஸ்லிம் லீக் சார்பில் சர்புதீன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் தங்கராசு, அகில இந்திய தொழிலாளர் மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஈசுவரன், எம்.ஜி.ஆர்.கழக மாவட்ட செயலாளர் கலைவாணன் உள்பட திரளான பேர் கருப்பு சட்டை அணிந்தும், சட்டையில் கருப்பு பட்டை அணிந்தும் கலந்து கொண்டனர்.

அரியலூரில்...

அரியலூர் அண்ணா சிலை அருகே தி.மு.க. தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தி.மு.க. மாவட்ட செயலாளர் சிவசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட காங் கிரஸ் தலைவர் ராஜேந்திரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசு கடந்த ஆண்டு ரூ.1,000, ரூ.500 நோட்டுக்களை செல்லாது என்று அறிவித்து கருப்பு பணம் ஒழிக்கப்பட்டதாகவும், தீவிரவாதம் கட்டு படுத்தப்பட்டதாகவும் கூறி வருகிறது. ஆனால் பண மதிப்பு இழப்பு மூலம் இந்திய பொருளாதாரம் சீரழிந்து விட்டது என்று கூறி தி.மு.க., காங்கிரஸ் மற்றும் தோழமை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் உலக நாதன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செய லாளர் செல்வ நம்பி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் மணிவேல், திராவிடர் கழக மாவட்ட தலைவர் நீலமேகம், சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் கணேசன், மனித நேய மக்கள் கட்சி செவுக்கத்அலி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story