சீட்டு நிறுவனம் நடத்தி மோசடி மேலாளர் உள்பட 3 பேர் கைது
திருச்சியில் சீட்டு நிறுவனம் நடத்தி மோசடியில் ஈடுபட்ட மேலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருச்சி,
திருச்சி தில்லைநகரில் திரிபுரா சிட்பண்ட்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற சீட்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தின் ஊழியர்கள் திருச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று, பொதுமக்களிடம் எங்கள் நிறுவனம் சார்பில் நடத்தப்படும் சீட்டு திட்டத்தில் சேர்ந்து பயன் அடையலாம் என்று கூறி உள்ளனர். இதனை நம்பி ஏராளமானோர் அந்த நிறுவனத்தில் மாதந்தோறும் பணத்தை செலுத்தி வந்தனர்.
ஆனால் அந்த நிறுவனத்தினர் கூறியபடி பணத்தை திருப்பி கொடுக்காததால் கடந்த 7-ந் தேதி காலை பணம் செலுத்தியவர்கள் அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினார்கள். தகவல் அறிந்து தில்லைநகர் போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். பின்னர் இது குறித்து மாநகர குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கும்படி கூறினார்கள்.
3 பேர் கைது
இதனை தொடர்ந்து திருச்சி நடுகல்லுக்காரத்தெருவை சேர்ந்த மணிமுருகன் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். அதில், “தன்னுடன் சேர்ந்து 134 பேருக்கு வழங்க வேண்டிய ரூ.1 கோடியே 99 லட்சத்தை திருப்பி தராமல் அந்த நிறுவனத்தினர் மோசடி செய்து விட்டதாகவும், இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்“ என்றும் கூறி இருந்தார். இந்த புகாரின்பேரில் மாநகர குற்றப்பிரிவு போலீசார் 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதனை தொடர்ந்து கிளை மேலாளர் மோகன்ராஜ், ஊழியர்கள் திருநாவுக்கரசு, கார்த்திக் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் 4 பேரை தேடி வருகிறார்கள்.

Related Tags :
Next Story