தேனி மாவட்டத்தில் 11 தடுப்பணைகள் கட்டப்படும் முதல்-அமைச்சர் அறிவிப்பு
தேனி மாவட்டத்தில் மழை நீரை சேமிக்க 11 தடுப்பணைகள் கட்டப்படும் என்று முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.
தேனி,
தேனியில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பருவமழையின்போது, பொழிகின்ற மழைநீர் ஒரு சொட்டுக்கூட வீணாகாமல் அனைத்தையும் தேக்கி வைக்கவேண்டுமென்ற எண்ணத்தின் அடிப்படையிலே தேனி மாவட்டத்திற்கு 11 தடுப்பணைகள் கட்டப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியினை தெரிவித்துக்கொள்கின்றேன். அதன்படி, போடி வட்டம், பூதிபுரம் கிராமம், வலையாற்றின் குறுக்கே மாமரத்து வயல் அருகிலும், நாட்டாமைதோப்பு அருகிலும் இரண்டு தடுப்பணைகள் கட்டப்படும்.
உத்தமபாளையம் வட்டம், தேவாரம் கிராமத்தில் பிள்ளையார் ஊத்து ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிப்பட்டி வட்டம், கடமலைக்குண்டு கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். ஆண்டிப்பட்டி வட்டம், வள்ளல்நதி கிராமத்தின் அருகே வைகை ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
ஆண்டிப்பட்டி வட்டம், எஸ்.எஸ்.புரம் கிராமத்தில் நாகலார் ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடி வட்டம், மதுரை வீரன் கோவில் அருகே அணைக்கரைபட்டி கிராமத்தில் கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடி வட்டம், போடி கிராமத்தில் புல எண்.683/2 அருகே கொட்டக்குடி ஆற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். போடி வட்டம், போடி கிராமத்தில் புல எண்.1218 அருகே சின்னாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும்.
போடி வட்டம், மாணிக்கபுரம் அருகே சுத்த கங்கை ஓடையின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் விநாயகர் கோவில் அருகே மஞ்சளாற்றின் குறுக்கே ஒரு தடுப்பணை கட்டப்படும். பெரியகுளம் வட்டம், கெங்குவார்பட்டி கிராமத்தில் அமைந்துள்ள புது அணைக்கட்டு கால்வாய் தூர்வாரப்பட்டு, மதகுகளைப் புதியதாகக் கட்டி, மஞ்சளாற்றில் வரும் தண்ணீர் எவ்வித தடையுமின்றி மத்துவார்குளம் கண்மாயை சென்று அடையும் வகையில் சிமெண்டு வாய்க்காலாக மாற்றப்படும். இத்திட்டத்தின் மூலம் 474 ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி உறுதி செய்யப்படும்.
தேனி வட்டத்தின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்யும் பொருட்டு அல்லிநகரம் மீறுசமுத்திரம் கண்மாயை ஆழப்படுத்தி அதன் கொள்ளளவு உயர்த்தப்படும். ஆண்டிப்பட்டி கணவாய் முதல் சுப்புலாபுரம் வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். தேனி நகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகப் பகுதியிலிருந்து போடிவிலக்கு வரை உள்ள சாலை வலுப்படுத்தப்படும். ஆண்டிப்பட்டி தாலுகா மயிலாடும்பாறை சாலை வழியாக வாய்க்கால் பாறை-மூலக் கடை சாலையில் 2 இடங்களில் உயர்மட்ட பாலங்கள் கட்டப்படும். தேவாரம் லட்சுமிநாயக்கன்பட்டி வழியாக செல்லும் திம்மிநாயக்கன்பட்டி சாலையில் 2 இடங்களில் சிறுபாலங்கள் கட்டப்படும்.
தேனி மாவட்டம், பெரிய குளம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் அதிநவீன உபகரணங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் டயாலிசிஸ், எண்டோஸ்கோப், மன நல சிறப்பு பிரிவு உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் உள்ள மருந்து கிடங்கு விரிவாக்கம் செய்யப்படும். தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மேமோகிராம் அமைக்கப்படும்; மூப்பியல் பிரிவு ஏற்படுத்தப்படும். தேனி மாவட்டத்தில் பணியாற்றும் 162 கிராமப்புற சுகாதார செவிலியர்களுக்கு மருத்துவ புள்ளி விவரங்களைப் பதிவு செய்திட கையடக்கக் கணினிகள் வழங்கப்படும்.
கம்பம் அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் உள்ளிட்ட நவீன ஆய்வகக் கருவிகள் வழங்கப்படும். வீரபாண்டி அரசு மருத்துவமனையில் நவீன கண் பரிசோதனை மற்றும் சிகிச்சை மையம் அமைக்கப்படும். வீரபாண்டி கிராம சுகாதார செவிலியர் பயிற்சி பள்ளி மேம்படுத்தப்படும். மயிலாடும்பாறை மற்றும் கடமலைக்குண்டு வட்டாரங்களில் விரிவான ஆரம்ப நல்வாழ்வு சேவைகள் வழங்கப்படும்.
கடந்த ஆறு ஆண்டுகளில் தேனி மாவட்டத்துக்கு என அ.தி.மு.க. அரசு செயல்படுத்தியுள்ள திட்டங்கள் சிலவற்றை குறிப்பிட விரும்புகிறேன். சிறு குறு விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய நிலுவையில் உள்ள விவசாய கடன் ரூ.85 கோடியே 46 லட்சம் தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் 12,484 விவசாயிகள் பயன்பெற்றனர். விலையில்லா மடிக்கணினிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 61 ஆயிரத்து 364 மாணவ-மாணவிகளுக்கு ரூ.70 கோடியே 33 லட்சம் மதிப்பீட்டில் விலையில்லா மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன. 15 ஆயிரத்து 532 பெண்களுக்கு ரூ.53 கோடியே 55 லட்சம் திருமண உதவி நிதியும், 62 கிலோ தங்கமும் வழங்கப்பட்டுள்ளன. முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.36 கோடியே 54 லட்சம் செலவில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சூரிய சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் 2,789 வீடுகள் ரூ.71 கோடியே 38 லட்சம் மதிப்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.
தாய் திட்டத்தின் கீழ், ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் 2,615 பணிகள் தொடங்கப்பட்டு, 2,437 பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. நகராட்சிப் பகுதிகளில் ரூ.39 கோடி செலவில் பிளாஸ்டிக் கழிவுகளைக் கொண்டு 8,702 மீட்டர் நீளம் தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளன. 17 ஆயிரத்து 333 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வங்கிகள் மூலம் ரூ.571 கோடி நேரடிக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் துறையின் மூலம் 2 பாலிடெக்னிக் கல்லூரிகள், தலா ஒரு செவிலியர் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரி, பொறியியல் கல்லூரி தொடங்கப்பட்டு உள்ளது. மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக்கழகம் சார்பில் ரூ.48 கோடியே 70 லட்சம் மதிப்பில் 8 புதிய மின் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ரூ.35 கோடியே 40 லட்சம் மதிப்பில் புதிய மேம்பாட்டுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. நெடுஞ்சாலைத் துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு பிரிவின் கீழ் ரூ.342 கோடியே 19 லட்சம் செலவில், 837.41 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. 96 சிறுபாலப் பணிகள் ரூ.78 கோடியே 62 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ளன.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ரூ.83 லட்சம் செலவில் 13 பணிகள் செயல்படுத்தப்பட்டு உள்ளன. மேலும் ரூ.1 கோடியே 92 லட்சம் மதிப்பில் 14 பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. விவசாயிகளுக்கு, விலையில்லா வண்டல் மண் வழங்கும் திட்டத்தின் கீழ் 173 குளங்கள் மற்றும் கண்மாய்களின் மூலம் 9 லட்சத்து 30 ஆயிரத்து 196 கன மீட்டர் வண்டல் மண் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 13 ஆயிரத்து 941 விவசாயிகள் பயன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில், தேனி ஒன்றிய அ.தி.மு.க. பொறுப்பாளர் ஆர். முருகேசன், தேனி ஒன்றிய செயலாளர் ஆர்.டி.கணேசன், நகர செயலாளர் எஸ்.முருகேசன், ஜெயக்குமார், தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் மாநில தலைவர் எல்லப்பட்டி முருகன், மாவட்ட வக்கீல் பிரிவு இணைச்செயலாளர் கிருஷ்ணகுமார், தேனி அல்லிநகரம் நகராட்சி கமிஷனர் ராஜாராம், உத்தமபாளையம் பேரூர் செயலாளர் அழகுராஜா, எம்.ஜி.ஆர். மன்ற கிளை செயலாளர் குமார், சின்னமனூர் நகர துணைச்செயலாளர் கண்ணமாள் கார்டன் ராஜேந்திரன், மாவட்ட பிரதிநிதி செல்வம், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் கல்யாணக்குமார், ஆண்டிப்பட்டி ஒன்றியக்குழுத் முன்னாள் தலைவர் ஏ.லோகிராஜன், ஆண்டிப்பட்டி அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் கே.பால்பாண்டியன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் டி.கே.ஆர்.கணேசன், ஆண்டிப்பட்டி பேரூர் செயலாளர் முத்துவெங்கட்ராமன், ஆத்தாங்கரைப்பட்டி ஊராட்சி முன்னாள் தலைவர் கொத்தாளமுத்து, இளைஞர் பாசறை மாவட்ட இணைச்செயலாளர் கவிராஜன்.
போடி நகராட்சி ஆணையாளர் சுவாமிநாதன், என்ஜினீயர் சரவணக்குமார், போடி ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.சற்குணம், ஒன்றிய அவைத்தலைவர் ஜி.கணேசன், எஸ்.கருப்பையா, முத்துராஜ், பெரியகுளம் ஒன்றிய செயலாளர் வீ.அன்னபிரகாஷ், முன்னாள் துணைச்செயலாளர் எம்.செல்லமுத்து, கெங்குவார்பட்டி பேரூர் செயலாளர் காட்டுராஜா, மாநில மீனவர் இணையம் நிர்வாக இயக்குனர் வைகைபாண்டி, மதுரை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகுரு, மாவட்ட ஊராட்சி குழு முன்னாள் துணைத்தலைவர் சக்கரைப்பட்டி ஆண்டி, பெரியகுளம் நகர துணைச்செயலாளர், பெரியகுளம் நகர துணைச்செயலாளர் அப்துல்சமது, பெரியகுளம் ஒன்றிய ஜெயலலிதா பேரவை துணைச்செயலாளர் கண்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
முன்னதாக விழாவுக்கு வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை ஆண்டிப்பட்டி நகரில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் செண்டைமேளத்துடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Related Tags :
Next Story