பட்டப்பகலில் துணிகரம்: வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகள் கொள்ளை
கோவில்பட்டி அருகே, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில்பட்டி,
கோவில்பட்டி அருகே, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து 8 பவுன் தங்க நகைகளை கொள்ளை அடித்து சென்றவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நகைகள் கொள்ளைகோவில்பட்டி அருகே நக்கலமுத்தன்பட்டியை சேர்ந்தவர் பெருமாள்சாமி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி (வயது 41). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். பெருமாள்சாமி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மூத்த மகன் ராணுவத்திலும், இளைய மகன் சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்திலும் வேலை செய்து வருகின்றனர். வீட்டில் ஜெயலட்சுமி தனியாக வசித்து வருகிறார்.
நேற்று முன்தினம் காலையில் வழக்கம்போல் அவர், தனது வீட்டை பூட்டி விட்டு, கூலி வேலைக்கு சென்றார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் ஜெயலட்சுமியின் வீட்டின் முன்பக்க கதவை உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் வீட்டில் இருந்த பீரோவை உடைத்து, அதில் இருந்த 8 பவுன் நகைகளை கொள்ளை அடித்து கொண்டு தப்பி சென்றனர்.
போலீசார் விசாரணைமதியம் வேலை முடிந்ததும் அவர், தனது வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு, பீரோ உடைக்கப்பட்டு திறந்து கிடந்தததையும், அதில் இருந்த நகைகள் திருடு போனதையும் அறிந்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில், நாலாட்டின்புத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜூடி வழக்குப்பதிவு செய்து, பட்டப்பகலில் வீட்டின் கதவை உடைத்து நகைகளை திருடிச் சென்றவர்களை வலைவீசி தேடி வருகிறார்.