திருமாந்துறை வெள்ளாற்றில் மணல் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
திருமாந்துறை வெள்ளாற்றில் மணல் கடத்திய லாரி, பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
மங்களமேடு,
பெரம்பலூர் மாவட்டம் மங்களமேட்டை அடுத்துள்ள திருமாந்துறை வெள்ளாற்றில் லாரிகள் உள்ளிட்ட வாகனங்களில் மணல் திருட்டு நடைபெற்று வருகிறது. இதுதொடர்பாக குன்னம் தாசில்தாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதை யடுத்து நேற்று முன்தினம் இரவு குன்னம் வட்டாட்சியர் தமிழரசன், வருவாய் ஆய்வாளர் சிலம்பரசன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் ஆகியோர் திருமாந்துறை வெள்ளாற்றை ஒட்டியுள்ள பகுதிகளில் ரோந்து பணியை மேற்கொண் டனர்.
லாரி, பொக்லைன் எந்திரம் பறிமுதல்
அப்போது திட்டக்குடி வட்டம் ஆவட்டி கிராமத்தை சேர்ந்த சுதாகருக்கு சொந்தமான டிப்பர் லாரியில் வெள்ளாற்றில் பொக்லைன் எந்திரம் மூலம் மணல் ஏற்றிக்கொண்டு இருந்தனர். இதைக்கண்ட அதிகாரிகள் லாரியையும், பொக்லைன் எந்திரத்தையும் பறிமுதல் செய்தனர். பின்னர் லாரி மற்றும் பொக்லைன் எந்திரத்தை அதிகாரிகள் குன்னம் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து குன்னம் வட்டாட்சியர் விசாரணை நடத்தி வருகிறார்.

Related Tags :
Next Story