நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டை,
நாம் தமிழர் கட்சியின் சார்பில் நேற்று புதுக்கோட்டை அண்ணாசிலை அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மாவட்ட செயலாளர் அருள்மொழிசோழன் தலைமை தாங்கினார். மாநில கொள்கைபரப்பு செயலாளர் ஜெயசீலன், மாவட்ட தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாய நிலங்களில் எண்ணெய் குழாய்களை புதைக்க கூடாது. தஞ்சாவூர் மற்றும் நாகை பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும். காவிரி மேலாண்மை வாரியத்தை உச்சநீதிமன்றம் அமைக்கச்சொல்லியும், அமைக்காத மத்திய அரசை கண்டிப்பது, இந்திய அரசியலமைப்பு சட்டம் மக்களுக்காக வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளான பேச்சுரிமை, எழுத்துரிமை, போராடும் உரிமைகளை மறுத்து வரும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பது மற்றும் ஓ.என்.ஜி.சி.க்கு எதிராக போராடிய நாம் தமிழர் கட்சியினரை கைது செய்த மத்திய, மாநில அரசுகளை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கட்சி நிர்வாகிள் பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story