‘மெர்சல்’ படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டருக்கு ‘சீல்’ வைப்பு


‘மெர்சல்’ படம் திரையிடப்பட்ட சினிமா தியேட்டருக்கு ‘சீல்’ வைப்பு
x
தினத்தந்தி 12 Nov 2017 10:15 PM GMT (Updated: 2017-11-13T01:19:43+05:30)

திருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

திருப்பூர்,

திருப்பூர் முருங்கபாளையத்தில் சரண் சினிமா தியேட்டர் உள்ளது. இந்த தியேட்டரின் உரிமத்தை புதுப்பிக்குமாறு வருவாய்த்துறை சார்பில் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் உரிமத்தை அவர்கள் உரிய காலத்திற்குள் புதுப்பிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் திரைப்படம் திரையிடக்கூடாது என்று அதிகாரிகள் உத்தரவிட்டு இருந்தனர். எனவே அந்த சினிமா தியேட்டரில் படம் திரையிடப்படாமல் இருந்தது.

இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு அனுமதி இல்லாமலும், உரிமம் புதுப்பிக்கப்படாமலும் தியேட்டரில் நடிகர் விஜய் நடித்த ‘மெர்சல்’ திரைப்படம் திரையிடப்பட்டது. இதனை அறிந்த அதிகாரிகள் நேற்று காலை சரண் சினிமா தியேட்டருக்கு சென்று ‘சீல்’ வைத்தனர். இதையடுத்து தியேட்டர் மூடப்பட்டு சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டன.


Next Story