மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் ஆஸ்திரேலிய தொழில் அதிபர் கைது


மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் ஆஸ்திரேலிய தொழில் அதிபர் கைது
x
தினத்தந்தி 12 Nov 2017 9:44 PM GMT (Updated: 12 Nov 2017 9:43 PM GMT)

மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் வந்த ஆஸ்திரேலிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

மும்பை,

மும்பை விமான நிலையத்தில் சாட்டிலைட் போனுடன் வந்த ஆஸ்திரேலிய தொழில் அதிபர் கைது செய்யப்பட்டார்.

சாட்டிலைட் போன்

மும்பை பன்னாட்டு விமான நிலையத்திற்கு சம்பவத்தன்று வெளிநாட்டில் இருந்து விமானம் ஒன்று வந்து இறங்கியது. அதில், வந்த பயணிகளின் உடைமைகளை மத்திய பாதுகாப்பு படை வீரர்கள் சோதனை செய்தனர். அப்போது ஒரு பயணியின் பையில் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று இருப்பது தெரிந்தது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் அந்த பையை திறந்து சோதனை போட்டனர். அப்போது அதில், இந்தியாவில் தடைசெய்யப்பட்ட சாட்டிலைட் போன் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து அந்த சாட்டிலைட் போன் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆஸ்திரேலிய தொழில் அதிபர்

இதைத்தொடர்ந்து பாதுகாப்பு படை வீரர்கள் சாட்டிலைட் போனுடன் வந்த பயணியை பிடித்து சகார் விமான நிலைய போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சாட்டிலைட் போனுடன் சிக்கியவர் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தொழில் அதிபர் கார்டன் பீட்டர்(வயது58) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் அந்தேரி மெட்ரோபாலிட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அப்போது அவர், இந்தியாவில் சாட்டிலைட் போன் பயன்படுத்த கூடாது என்பது தெரியாமல் அதை கொண்டு வந்து விட்டதாக கூறினார். இதையடுத்து கோர்ட்டு அவரை ஜாமீனில் விடுதலை செய்தது.


Next Story