பத்திரிகையாளரை தாக்கியதாக சிவசேனா கவுன்சிலர், ஆதரவாளர் கைது


பத்திரிகையாளரை தாக்கியதாக சிவசேனா கவுன்சிலர், ஆதரவாளர் கைது
x
தினத்தந்தி 13 Nov 2017 3:35 AM IST (Updated: 13 Nov 2017 3:35 AM IST)
t-max-icont-min-icon

பத்திரிகையாளரை தாக்கியதாக சிவசேனா கவுன்சிலர், அவரது ஆதரவாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தானே,

பத்திரிகையாளரை தாக்கியதாக சிவசேனா கவுன்சிலர், அவரது ஆதரவாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கம்பால் அடித்தனர்

தானே பத்லாப்பூரில் உள்ளுர் செய்திதாள் நிறுவனம் நடத்தி வருபவர் மகேஷ் காமத். இவரது காரில் கடந்த வெள்ளிக்கிழமை பஸ் ஒன்று மோதியது. எனவே அவர், இது குறித்து போலீசில் புகார் அளிக்க சென்று கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த சிவசேனா கவுன்சிலர் துக்காராம் மகாத்ரே மற்றும் அவரது ஆதரவாளர் பாண்டியா ஆகியோர் சேர்ந்து மகேஷ் காமத்தை கம்பால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

கவுன்சிலர் கைது

இது குறித்து மகேஷ் காமத் போலீசில் புகார் அளித்தார். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கவுன்சிலர் துக்காராம் மகாத்ரே மற்றும் அவரது ஆதரவாளரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுன்சிலர் துக்காராம் மகாத்ரேவின் சகோதரர் பத்லாப்பூர்– குல்காவ் நகராட்சியில் தலைவராக உள்ளார். அவர் செய்த முறைகேட்டை அம்பலப்படுத்தியதால் கவுன்சிலர் துக்காராம் மகாத்ரே அவரது ஆதரவாளருடன் சேர்ந்து தன்னை தாக்கியதாக மகேஷ் காமத் கூறியுள்ளார்.


Next Story