தனுஷ்கோடி அருகே தெற்கு கடற்கரையில் நின்று இருந்த இலங்கை மர்ம படகு கைப்பற்றி போலீசார் விசாரணை


தனுஷ்கோடி அருகே தெற்கு கடற்கரையில் நின்று இருந்த இலங்கை மர்ம படகு கைப்பற்றி போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 14 Nov 2017 4:00 AM IST (Updated: 14 Nov 2017 1:11 AM IST)
t-max-icont-min-icon

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரத்திற்கும்–புதுரோடுக்கும் இடைப்பட்ட தெற்கு பகுதியான ஒத்ததாளை கடற் கரையில் புதிதாக பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக மீனவர்கள் தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தனுஷ்

ராமேசுவரம்,

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரத்திற்கும்–புதுரோடுக்கும் இடைப்பட்ட தெற்கு பகுதியான ஒத்ததாளை கடற் கரையில் புதிதாக பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தி வைக்கப் பட்டுள்ளதாக மீனவர்கள் தனுஷ்கோடி போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதை தொடர்ந்து தனுஷ்கோடி போலீஸ் நிலைய சப்–இன்ஸ்பெக்டர் ஸ்ரீராம், தனிப்பிரிவு காவலர் மாணிக்கம் மற்றும் கடலோர போலீசார் ஒத்ததாளை கடற்கரையில் மர்மமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த பிளாஸ்டிக் படகை பார்வையிட்டனர். இலங்கையை சேர்ந்த அந்த படகின் முன்பகுதியில் எம்.என்.ஆர். 2195 என்ற பதிவு எண் எழுதப்பட்டு இருந்தது.மேலும் படகில் என்ஜின் இல்லாமல் இருந்தது. அந்த படகை கடலோர போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இது பற்றி போலீசார் கூறும்போது, தனுஷ்கோடி ஒத்ததாளை கடற்கரையில் நிறத்தப் பட்டிருந்த படகு இலங்கை மன்னாரை சேர்ந்த படகு என்பது தெளிவாக தெரிகிறது. இந்த படகில் வந்தவர்கள் யார் என்ற விவரம் தெரியவில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறினர்.


Next Story