விசாரணை கைதி தற்கொலை: உறவினர்கள், போலீசாரிடம் நீதிபதி விசாரணை
அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்.
அருப்புக்கோட்டை,
அருப்புக்கோட்டை தாலுகா போலீஸ் நிலையத்திற்கு சுக்கிலநத்தம் கிராமத்தை சேர்ந்த மலைச்சாமி என்பவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன் தினம் அவர் போலீஸ் நிலையத்திலேயே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவர் போலீஸ் நிலையத்திலேயே தூக்கு போட்டு இறந்த சம்பவம் அருப்புக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியது. இச்சம்பவம் போலீசாரின் மத்தியிலும் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் இச்சம்பவம் தொடர்பாக விருதுநகர் குற்றவியல் நீதிபதி மும்தாஜ் மலைச்சாமியின் உறவினர்கள் மற்றும் போலீசாரிடம் நேற்று விசாரணை மேற்கொண்டார். பின்னர் அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஓப்படைக்கப்பட்டது.
Related Tags :
Next Story