கரூரில் அமராவதி ஆற்றில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டர் சிறைபிடிப்பு


கரூரில் அமராவதி ஆற்றில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டர் சிறைபிடிப்பு
x
தினத்தந்தி 14 Nov 2017 4:15 AM IST (Updated: 14 Nov 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் அமராவதி ஆற்றில் கழிவுகளை கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர்.

கரூர்,

கரூர் வஞ்சியம்மன் கோவில் தெரு அமராவதி ஆற்றங்கரையோரம் பொதுமக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று ஆற்றில் கொட்ட டிராக்டர் மூலம் கழிவுகள் கொண்டு வந்ததை பொதுமக்கள் கண்டனர்.

இதையடுத்து கழிவுகள் கொட்ட வந்த டிராக்டரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். மேலும் ஆற்றில் கழிவுகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இரவு நேரத்தில் கழிவுகளை தீயிட்டு எரிப்பதால் புகை மூட்டம் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.

மேலும் பழைய கட்டிட இடிபாடுகள், மண், கற்களும் அதில் இருந்தன. இதனால் கழிவுகளை கொட்ட அனுமதிக்கவில்லை.

அதிகாரிகள் விசாரணை

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் அதிகாரிகள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதற்கிடையில் கழிவுகளை தி.மு.க. பிரமுகர் ஒருவர் தனது வார்டில் இருந்து எடுத்து வந்து கொட்டுவதாகவும், நகராட்சியில் அதிகாரிகளிடம் அனுமதி பெற்றிருப்பதாகவும் அவர் கூறினார்.

ஆனால் கழிவுகளை ஆற்றில் கொட்ட அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. வாங்கல் அருகே உள்ள நகராட்சி குப்பை கிடங்கில் கொண்டு கழிவுகளை கொட்ட அறிவுறுத்தினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Next Story