43 நாட்களுக்கு பிறகு துப்பு துலங்கியது கல்லூரி மாணவர் உயிரோடு புதைத்து கொலை நண்பர்கள் 3 பேர் கைது

தஞ்சை வெண்ணாற்றில் கல்லூரி மாணவர் உயிரோடு புதைத்து கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அவருடைய நண்பர்கள் 3 பேரை 43 நாட்களுக்கு பிறகு போலீசார் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தஞ்சை வடக்குவாசல் ஏ.ஒய்.ஏ.நாடார் சாலை இரட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் ஆறுமுகம். மாநகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் சரவணன்(வயது18). இவர் தஞ்சையில் உள்ள ஒரு தனியார் கேட்டரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். கராத்தே பயிற்சி பெற்றுள்ளார். விடுமுறை நாட்களில் தப்பு அடிக்கும் பணி செய்வது வழக்கம். கடந்த செப்டம்பர் மாதம் 30-ந் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற சரவணன் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவனது பெற்றோர், உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி பார்த்தனர். ஆனால் அவரை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.
இதனால் 3 நாட்கள் கழித்து சரவணனின் பெற்றோர் தஞ்சை மேற்கு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார், காணவில்லை என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அதில் சரவணனை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அவரின் கதி என்ன? என்பது குறித்து விசாரணை நடத்த நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் சுகுமாரன், விஜய், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அண்ணாதுரை, போலீஸ்காரர்கள் மோகன், சிவபாரத், மார்ட்டீன், ராஜேஷ், சிங்காரம், மனோகர் ஆகியோர் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. அவர்கள் தீவிர விசாரணை நடத்தினர்.
அதில் சரவணனை கொலை செய்து இருக்கலாமோ என அவரது நண்பர்கள் சிலர் மீது தனிப்படை போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர்களை போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இதை அறிந்த சரவணனின் நண்பரான தஞ்சை மிஷன்தெருவை சேர்ந்த மூர்த்தி மகன் நந்தகுமார்(23) கரந்தை கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தத்திடம் சரண் அடைந்து ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அதில் சரவணனை உயிரோடு வெண்ணாற்றில் புதைத்துவிட்டதாக தெரிவித்து இருந்தார். பின்னர் நந்தகுமார் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.
அவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில், இவரும், இரட்டைபிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் ஆனந்த்(23), கரந்தையை சேர்ந்த சீனிவாசன் மகன் நவநீதகிருஷ்ணன்(19) ஆகியோரும் சேர்ந்து சரவணனை வெண்ணாற்றில் உயிரோடு புதைத்து கொலை செய்தது தெரியவந்தது. புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் காட்டுவதற்காக நேற்றுகாலை இவர்கள் 3 பேரையும் போலீசார் அழைத்து கொண்டு தஞ்சை கூடலூர் அருகே வெண்ணாற்றங்கரைக்கு சென்றனர். அங்கு அவர்கள் வெண்ணாற்றின் மையப்பகுதியில் இருந்த மணல் திட்டில் சரவணனை உயிரோடு புதைத்த இடத்தை அடையாளம் காட்டினர். இவர்கள் புதைத்தபோது ஆற்றில் தண்ணீர் செல்லவில்லை. இப்போது ஆற்றில் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.
இதனால் இடுப்பளவு தண்ணீரில் இறங்கி மணல் திட்டுக்கு போலீசார் சென்றனர். அங்கு தஞ்சை தாசில்தார் தங்கபிரபாகரன், நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன், இன்ஸ்பெக்டர்கள் ஜோதிராமலிங்கம், பெரியசாமி, வருவாய் ஆய்வாளர் அருண், கிராம நிர்வாக அலுவலர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலையில் சரவணனின் உடலை தோண்டி எடுக்கும் பணி நடைபெற்றது. 5 அடி ஆழத்திற்கு மணல் அள்ளியபோது எலும்புகள் தென்பட்டதுடன் துர்நாற்றமும் வீசியது.
சதைகள் எதுவும் இல்லாமல் எலும்பு கூடு மட்டுமே இருந்தது. வாயில் ஒரு துணி இருந்தது. கை, கால்களை கட்ட பயன்படுத்திய கயிறு ஆகியவையும் எலும்பு கூடுடன் இருந்தது. பின்னர் எலும்புகளை ஒன்றாக அள்ளி ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு அவற்றை பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் புதைக்கப்பட்ட இடத்தில் இருந்து மணலும் ஆய்வுக்காக எடுத்து செல்லப்பட்டது. இதையடுத்து காணாமல் போனதாக பதிவு செய்யப்பட்ட வழக்கை கொலை வழக்காக மேற்கு போலீசார் மாற்றி ஆனந்த், நவநீதகிருஷ்ணன், நந்தகுமார் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
எதற்காக சரவணனை கொலை செய்தார்கள் என்பது குறித்து நகர துணை போலீஸ் சூப்பிரண்டு தமிழ்ச்செல்வன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கைது செய்யப்பட்டுள்ள 3 பேரும் சரவணனின் நண்பர்கள் தான். இவர்களுக்குள் சிறு, சிறு தகராறு ஏற்பட்டு அடிதடி சம்பவங்கள் சில நேரங்களில் ஏற்பட்டுள்ளது. இருந்தாலும் அவற்றை மறந்து அனைவரும் ஒன்றாக பழகி வந்துள்ளனர். திடீரென சரவணன் இவர்களை விட்டு பிரிந்து மற்றொரு தரப்பினரிடம் நெருங்கி பழகினார். அந்த சமயத்தில் மீண்டும் இவர்களுக்கு மோதல் ஏற்பட்டபோது உங்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார்.
சொன்னதுபடி செய்துவிட்டால் என்ன செய்வது என்று யோசனை செய்த ஆனந்த் தனது நண்பர்கள் 2 பேருடன் சேர்ந்த சரவணனுக்கு பயத்தை ஏற்படுத்த வேண்டும் என்று முடிவு செய்தனர். அதன்படி அவரிடம் அன்பாக பேசி தஞ்சை அருகே உள்ள ஒரு பண்ணைக்கு அழைத்து சென்றனர். அங்கு அனைவரும் மது குடித்துள்ளனர். திடீரென சரவணனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒரு நாள் முழுவதும் வைத்து அடித்து உதைத்துள்ளனர். பின்னர் இப்படியே வெளியே விட்டால் நமக்கு ஆபத்து என்று கருதிய 3 பேரும் சரவணனை உயிரோடு புதைத்து கொலை செய்துவிட்டனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெண்கள் பிரச்சினை காரணமாக கொலை நடந்துள்ளதாக கூறப்படுகிறதே என்று அவரிடம் கேள்வி கேட்டபோது, பெண்கள் பிரச்சினை எதுவும் இல்லை. சில பெண்களின் பெயரை கூறி சரவணன் தவறாக பேசி வந்துள்ளார்.
அந்த பெண்களின் உறவினர் 2 பேர் முதல்நாள் சரவணனை தாக்கியுள்ளனர். ஆனால் அவர்கள் கொலை நடந்த நாள் செல்லவில்லை. அவர்களும் இந்த வழக்கில் சேர்க்கப்படுவார்கள். பிள்ளையார்கோவில் தெருவை சேர்ந்த அஜித், மற்றொரு சரவணன் ஆகியோரை தேடி வருகிறோம் என்று கூறினார். இந்த வழக்கில் 43 நாட்களுக்கு பிறகு துப்பு துலங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Tags :
Next Story