தூத்துக்குடி மாநகராட்சியில் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் கீதாஜீவன் கோரிக்கை
தூத்துக்குடி மாநகராட்சியில் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி மாநகராட்சியில் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைவில் முடிக்க வேண்டும் என்று கீதாஜீவன் எம்.எல்.ஏ. கோரிக்கை வைத்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது;–
குடிநீர் இணைப்புதூத்துக்குடி மாநகராட்சி பகுதியுடன் இணைக்கப்பட்ட 9 வார்டுகளில் உள்ள மக்களின் குடிநீர் தேவைக்காக 4–வது குடிநீர் குழாய் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டம் தொடங்கி 7 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடியவில்லை. இந்த நிலையில் மாநகராட்சி ஆணையாளர், குடிநீர் இணைப்புக்கு பணம் கட்டியவர்களுக்கு உடனடியாக குடிநீர் இணைப்பு வழங்கப்படும் என்று கூறி உள்ளார். பெறும்பாலான வார்டுகளில் குழாய்கள் பதிக்கும் பணியே நடக்கவில்லை. பின்னர் எப்படி குடிநீர் இணைப்பு வழங்க முடியும்?.
மாநகராட்சி ஆணையாளரின் இந்த அறிக்கை, வருகிற 22–ந்தேதி தூத்துக்குடிக்கு வரும் முதல்–அமைச்சரை திருப்தி படுத்துவதற்காக விடப்பட்ட அறிக்கையாக இருக்கலாம்.
இனியும் காலம் தாழ்த்தாமல் 4–வது குடிநீர் குழாய் திட்ட பணிகளை விரைவில் முடித்து, பொதுமக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைத்து பகுதிகளிலும் ஒரே அளவான குடிநீர் வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கால்வாய்கள்மாநகர் முழுவதும் கழிவுநீர் கால்வாய்கள் மண், குப்பை போன்றவற்றால் மேடாகி சுகாதார சீர் கேட்டை உருவாக்கி வருகிறது. பல முறை இந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண மாநகராட்சியை வலியுறுத்தியும் இதுவரை எந்த பணியும் நடக்கவில்லை.
எனவே கழிவுநீர் மற்றும் குப்பைகளால் ஏற்பட்டுள்ள சுகாதார சீர் கேட்டிற்கு தீர்வு காண மாநகராட்சி நிர்வாகிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வீட்டு குடிநீர் இணைப்பையும் அனைத்து பகுதி மக்களுக்கும் விரைந்து வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.