கண்டமானடியில் இயங்கி வரும் துணை தபால் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு


கண்டமானடியில் இயங்கி வரும் துணை தபால் நிலையத்தை இடமாற்றம் செய்வதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு கலெக்டரிடம் மனு
x
தினத்தந்தி 15 Nov 2017 3:45 AM IST (Updated: 15 Nov 2017 1:44 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் அருகே கண்டமானடி மற்றும் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே கண்டமானடி மற்றும் சுற்றியுள்ள அரியலூர், சித்தாத்தூர், காவணிப்பாக்கம், கண்டம்பாக்கம், மரகதபுரம், வேலியம்பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட கலெக்டர் சுப்பிரமணியனை சந்தித்து ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:– கண்டமானடியில் துணை தபால் நிலையம் இயங்கி வருகிறது. இந்த தபால் நிலையத்தை விழுப்புரம் தந்தை பெரியார் நகருக்கு இடமாற்றம் செய்ய அதிகாரிகள் சிலர் முயற்சி செய்து வருகின்றனர்.

கண்டமானடியில் உள்ள தபால் நிலையத்தின் மூலம் சுற்று வட்டாரத்தில் உள்ள 10–க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் பயன்பெற்று வருகின்றனர். இந்த நிலையில் தபால் நிலையம் இடமாற்றம் செய்யப்பட்டு விட்டால் நாங்கள் தபால் சேவைக்காக நகர பகுதிக்கு வந்துசெல்ல காலவிரயமும், வீண் செலவும் ஏற்படும். எனவே கண்டமானடி கிராமத்திலேயே தபால் நிலையம் தொடர்ந்து இயங்கவும், தபால் நிலையத்திற்கு சொந்தமாக கட்டிடம் கட்டவும் மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறியிருந்தனர். மனுவை பெற்ற கலெக்டர் சுப்பிரமணியன், இதுகுறித்து பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story