உடல் நலக்குறைவால் பெண் யானை சாவு வனத்துறையினர் விசாரணை
தளி அருகே உடல் நலக்குறைவால் பெண் யானை இறந்தது. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
தேன்கனிக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் வனப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதில் தளி வனச்சரகத்திற்கு உட்பட்ட தேவர்பெட்டா வனப்பகுதியில் 30-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இந்த யானைகள் அருகில் உள்ள தேவர்பெட்டா, தாசரப்பள்ளி, சூடசந்திரம் கிராமங்களுக்கு சென்று அங்கு விவசாயிகள் பயிரிட்டுள்ள ராகி, தக்காளி, பீன்ஸ், முட்டைகோஸ் உள்ளிட்ட பயிர்களை தின்றும், கால்களால் மிதித்தும் சேதப்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில் சூடசந்திரம் ஊராட்சிக்கு உட்பட்ட தாசரப்பள்ளி கிராமத்தின் அருகில் வனப்பகுதியில் 20 வயது மதிக்கத்தக்க பெண் யானை நேற்று இறந்து கிடந்தது. இதை அந்த வழியாக சென்ற கிராம மக்கள் பார்த்து தளி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மாவட்ட வன அலுவலர் தீபக் பில்கி, மாவட்ட உதவி வன பாதுகாவலர் பிரியதர்ஷினி, வன உயிரின காப்பாளர் சஞ்சீவ் குமார், தளி வனச்சரகர் முருகேசன், தேவர்பெட்டா வனவர் செல்வராஜ் உள்ளிட்ட வனத்துறையினர் அங்கு சென்று காட்டு யானை இறந்தது குறித்து விசாரணை நடத்தினார்கள்.
உடல்நலக்குறைவால் இறந்தது
விசாரணையில், உயிர் இழந்த காட்டு யானையின் வயிற்று பகுதி பெரிதாக காணப்பட்டது. இந்த யானை மற்ற யானைகளுடன் சேர்ந்து விளைநிலங்களுக்கு வந்து பயிர்களை தின்றுள்ளது. இதைத்தொடர்ந்து மற்ற யானைகள் அங்கிருந்து சென்ற நிலையில், இந்த யானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அதே இடத்தில் இறந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இறந்து போன யானை ஒரு ஆண்டிற்கு முன்பு குட்டி ஈன்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதைத்தொடர்ந்து உயிர் இழந்த யானையை ஜவளகிரி கால்நடை மருத்துவர் பாரதிதாசன் தலைமையிலான டாக்டர் குழுவினர் பிரேத பரிசோதனை செய்து, அந்த பகுதியிலேயே அடக்கம் செய்தனர்.

Related Tags :
Next Story