பள்ளியின் முன்னேற்றத்துக்கு முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு


பள்ளியின் முன்னேற்றத்துக்கு முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம் முதன்மை கல்வி அலுவலர் பேச்சு
x
தினத்தந்தி 15 Nov 2017 4:00 AM IST (Updated: 15 Nov 2017 3:24 AM IST)
t-max-icont-min-icon

பள்ளியின் முன்னேற்றத்துக்கு முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம் என்று முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசினார்.

திருவண்ணாமலை,

திருவண்ணாமலையில் உள்ள தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளியில் தற்போது படிக்கும் மாணவர்களையும், முன்னாள் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் அமைப்பு தொடக்க விழாவும், குழந்தைகள் தின விழாவும் நடைபெற்றது. முன்னாள் மாணவர்கள் அமைப்பு தலைவர் ஏ.ஏ. ஆறுமுகம் தலைமை தாங்கினார். பள்ளி தலைமை ஆசிரியர் பி.சேகர், உதவி தலைமை ஆசிரியர் பி.சீனிவாசன், பள்ளி அமைப்பு செயலாளர் எஸ்.ரவி, பொருளாளர் தி.பாரதி மற்றும் பலர் முன்னிலை வகித்தனர்.

இதில் முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், மாவட்ட கல்வி அலுவலர் அ.உஷாராணி ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்.

முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் பேசியதாவது:-

ஒரு பள்ளியின் முன்னேற்றத்துக்கு முன்னாள் மாணவர்களின் பங்கு மிகவும் அவசியம். முன்னாள் மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி, கல்லூரியின் செயல்பாடுகளை அறிந்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை ஊக்கப்படுத்த வேண்டும். தாங்கள் படித்த பள்ளியை தாய்வீடாக கருதி வருடத்திற்கு ஒரு முறையாவது வந்து பள்ளியின் தேவையை அறிந்து உதவி செய்ய வேண்டும்.

முன்னாள் மாணவர்கள் பள்ளியில் படிக்கும் ஏழை மாணவர்களின் கல்விக்கு உதவ முன்வர வேண்டும். மேலும் பள்ளிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும். அதுமட்டுமின்றி பள்ளியில் மாணவர்களின் சேர்க்கையை அதிகப்படுத்த உதவ வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முன்னாள் மாணவர்கள் அமைப்பின் துணைத்தலைவர் ராஜா, செயலாளர்கள் வெங்கட்ராமன், பாஸ்கரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Related Tags :
Next Story