கடையம் அருகே மூதாட்டி மர்மச்சாவு மகனிடம் போலீசார் விசாரணை


கடையம் அருகே மூதாட்டி மர்மச்சாவு மகனிடம் போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 16 Nov 2017 2:00 AM IST (Updated: 15 Nov 2017 8:51 PM IST)
t-max-icont-min-icon

கடையம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கடையம்,

கடையம் அருகே மூதாட்டி மர்மமான முறையில் இறந்தார். இதுதொடர்பாக அவரது மகனிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்மச்சாவு

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கீழஆம்பூர் பெரிய தெருவை சேர்ந்தவர் ஈஸ்வரி (வயது 72). இவரது முதல் கணவர் தங்கமுத்து இறந்ததால் 2–வதாக அதே பகுதியை சேர்ந்த சுப்பையா என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவரும் இறந்து விட்டார். முதல் கணவர் மூலம் ஈஸ்வரன் என்ற மகனும், 2–வது கணவர் சுப்பையா மூலம் முருகன் என்ற மகனும் உண்டு.

இந்த நிலையில் ஈஸ்வரி தனது மகன்களின் வீடுகளில் தங்கியிருந்து வந்தார். கடந்த 10 நாட்களாக அவர் முருகன் வீட்டுக்கு வந்து தங்கி இருந்தார். அவருக்கு அடிக்கடி உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்தது. இதனால் உள்ளூர் வைத்தியர்களிடம் மருத்துவம் பார்த்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை ஈஸ்வரி வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து முருகன் ஊர் நாட்டாண்மை உள்ளிட்ட பெரியவர்களுக்கு தகவல் கொடுத்தார். மேலும் கடையம் போலீசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி, ஆழ்வார்குறிச்சி சப்–இன்ஸ்பெக்டர் செல்வராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் ஈஸ்வரியின் உடலை பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையே, ஈஸ்வரன் தனது தாய் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும், எனவே முருகனிடம் விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஆழ்வார்குறிச்சி போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி வழக்குப்பதிவு செய்து, முருகனை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை முடிவில் தான் ஈஸ்வரி எப்படி இறந்தார் என்பது தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.


Next Story