போடி அருகே போலி நிருபர் கைது


போடி அருகே போலி நிருபர் கைது
x
தினத்தந்தி 16 Nov 2017 3:15 AM IST (Updated: 16 Nov 2017 1:27 AM IST)
t-max-icont-min-icon

போடி அருகே முந்தல் கிராமத்தை சேர்ந்தவர் மனோஜ்குமார் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

போடி,

போடி அருகே உள்ள முந்தல் கிராமத்தை சேர்ந்தவர் தங்கபாண்டி மகன் மனோஜ்குமார் (வயது 22). இவர் ஆட்டோ ஒன்றை வாடகைக்கு எடுத்து ஓட்டி வருகிறார்.

 இந்த நிலையில் போடி அரசு மருத்துவமனை அருகே ஆட்டோவை நிறுத்திவிட்டு அவர் கடைக்கு சென்றார். சிறிது நேரத்துக்கு பிறகு திரும்பி வந்து பார்த்த போது ஆட்டோவில் இருந்த பேட்டரி, டேப் ரிக்கார்டர், ஒலிபெருக்கி பெட்டிகளை வாலிபர் ஒருவர் திருடிக் கொண்டிருந்தார். அவரை கையும் களவுமாக பிடித்து போடி நகர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதுகுறித்து மனோஜ்குமார் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த வாலிபரை கைது செய்தனர்.

விசாரணையில், அவர் போடி குலாளர்பாளையத்தை சேர்ந்த பிரேம்குமார் (25) என்றும், தனியார் தொலைக்காட்சியின் நிருபர் என்று ஏமாற்றியதும் தெரிய வந்தது. அவர் மீது ஏற்கனவே போடியில் டாஸ்மாக் கடைக்கு தீ வைத்த வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story