இளவரசன் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நேரில் விசாரணை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்


இளவரசன் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி நேரில் விசாரணை கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆஜர்
x
தினத்தந்தி 16 Nov 2017 3:45 AM IST (Updated: 16 Nov 2017 2:22 AM IST)
t-max-icont-min-icon

தர்மபுரி இளவரசன் மரணம் குறித்து ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிங்காரவேலு தர்மபுரியில் நேற்று நேரில் விசாரணை நடத்தினார். அப்போது கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆஜராகினர்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்டம் நாயக்கன்கொட்டாய் அருகே உள்ள நத்தம் காலனியை சேர்ந்தவர் இளவரசன். இவர் செல்லன்கொட்டாய் பகுதியை சேர்ந்த திவ்யா என்ற பெண்ணை காதல் திருமணம் செய்தார். இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு தர்மபுரி அரசு கலைக்கல்லூரியின் பின்புறம் உள்ள ரெயில் தண்டவாளத்தில் இளவரசன் இறந்து கிடந்தார்.

இளவரசனின் சாவில் சந்தேகம் இருப்பதாக குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து இளவரசனின் மரணம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி சிங்காரவேலு தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை ஆணைய நீதிபதி சிங்காரவேலு ஏற்கனவே தர்மபுரியில் சிலமுறை நேரில் விசாரணை நடத்தினார்.

சாட்சியம்

இளவரசன் மரணம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் அடுத்த கட்ட விசாரணை தர்மபுரி பயணியர் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இளவரசனின் உடலை பிரேத பரிசோதனை செய்த டாக்டர் தண்டர்ஷிப், விவசாய சங்க நிர்வாகி சின்னசாமி ஆகியோர் நேற்று விசாரணை ஆணைய நீதிபதி சிங்காரவேலு முன்பு ஆஜராகி சாட்சியம் அளித்தனர். அவர்களிடம் நீதிபதி சிங்காரவேலு விசாரணையை நடத்தினார்.

இதேபோல் தர்மபுரி மாவட்ட கலெக்டர் விவேகானந்தன், போலீஸ் சூப்பிரண்டு பண்டிகங்காதர் ஆகியோரும் விசாரணை ஆணையத்தில் ஆஜரானார்கள். இன்று(வியாழக்கிழமை) 2-வது நாளாக விசாரணை ஆணைய நீதிபதி சிங்காரவேலு விசாரணை நடத்துகிறார். 

Next Story