குப்பநத்தம் அணையில் பிணமாக கிடந்த தொழிலாளி போலீஸ் விசாரணை
குப்பநத்தம் அணையில் தொழிலாளி பிணமாக கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கம்,
செங்கத்தை அடுத்த குப்பநத்தம் அணை அருகே உள்ள கல்லாத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 47). தொழிலாளி. இவர், கடந்த 2 நாட்களுக்கு முன்பு விறகு வெட்டுவதற்காக அணை பகுதிக்கு சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.
இந்த நிலையில் நேற்று அணையின் கரை பகுதியில் கோவிந்தராஜ் பிணமாக கிடப்பதாக செங்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று கோவிந்தராஜின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக செங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தற்கொலை செய்து கொண்டாரா?
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிந்தராஜ் தண்ணீரில் மூழ்கி இறந்தாரா? அல்லது தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்த கோவிந்தராஜிக்கு நாச்சி என்ற மனைவியும், 3 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.

Related Tags :
Next Story