பெலகாவியில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்


பெலகாவியில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2017 5:35 AM IST (Updated: 16 Nov 2017 5:34 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவியில் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெற்றது. பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுக்கும்படி சித்தராமையா அறிவுறுத்தினார்.

பெலகாவி,

கர்நாடக சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் கடந்த 13–ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. முதல்–மந்திரி சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் பெலகாவியில் நேற்று நடைபெற்றது. இதில் மாநில காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர், மந்திரிகள் மற்றும் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது:–

நமது கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் பலர் சட்டசபைக்கு சரியாக வருவது இல்லை. இதைவிட உங்களுக்கு வேறு என்ன வேலை உள்ளது. இனிவரும் நாட்களில் சட்டசபை கூட்டத்தில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். சட்டசபையில் பங்கேற்க ஆர்வம் இல்லாமல் இருப்பது சரியல்ல. எதிர்க்கட்சிகள் பழைய பிரச்சினைகளை எழுப்புகின்றன. அவர்களுக்கு புதிதாக எந்த வி‌ஷயங்களும் இல்லை. அதனால் நீங்கள் எதிர்க்கட்சிகள் எழுப்பும் பிரச்சினைகளுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும்.

பெலகாவியில் இந்த ஆட்சியின் கடைசி கூட்டத்தொடர் நடக்கிறது. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு மாநிலத்தின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முயற்சி செய்யுங்கள். மந்திரி கே.ஜே.ஜார்ஜ் வி‌ஷயத்திலும் பா.ஜனதாவினர் அரசியல் செய்கிறார்கள். பா.ஜனதா தலைவர்கள் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதை சபையில் எடுத்துக்கூறி பா.ஜனதாவுக்கு தக்க பதிலடி கொடுங்கள்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.


Next Story