வளசரவாக்கத்தில் பிரபல கைக்கடிகார விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து


வளசரவாக்கத்தில் பிரபல கைக்கடிகார விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து
x
தினத்தந்தி 17 Nov 2017 3:30 AM IST (Updated: 17 Nov 2017 12:20 AM IST)
t-max-icont-min-icon

பிரபல கைக்கடிகார விற்பனை நிறுவனத்தில் தீ விபத்து, அறையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

பூந்தமல்லி,

சென்னை வளசரவாக்கம், இந்திரா நகர், ஆற்காடு சாலையில் சரத் என்பவருக்கு சொந்தமான பிரபல கைக்கடிகார விற்பனை நிறுவனம் (ஷோரூம்) உள்ளது. இங்கு 10–க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை செய்து வருகின்றனர்.

நேற்று மதியம் நிறுவனத்தில் உள்ள ஒரு அறையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனை கண்ட ஊழியர்கள், அங்கு சென்று பார்த்தனர். அதற்குள் புகை வந்த இடத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. ஊழியர்கள் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியாததால் வெளியே ஓடி வந்து விட்டனர்.

இதுபற்றி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்து வந்த விருகம்பாக்கம் தீயணைப்பு அதிகாரி ஆரிபா தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், சுமார் 1 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர். தீ விபத்தில் அந்த அறையில் வைக்கப்பட்டு இருந்த பொருட்கள் தீயில் எரிந்து நாசமானது.

இதுபற்றி வளசரவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர். மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story