காலில் காயம்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி ஆரம்ப சுகாதார நிலையம் முன் சாலை மறியல்
காலில் காயம்பட்ட சிறுவனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டார்கள்.
நம்பியூர்,
நம்பியூர் அருகே உள்ள புதுசூரிபாளையத்தை சேர்ந்த ராமசாமியின் மகன் அய்யாசாமி. அவருடைய மகன் மவுலிதரன் (வயது 4). இவனை தாத்தா ராமசாமி அருகே உள்ள கோவிலில் இருந்து சைக்கிளில் வீட்டுக்கு நேற்று காலை அழைத்து வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மவுலிதரனின் கால் சைக்கிள் சக்கரத்தில் சிக்கியது. இதில் அவன் காலில் இருந்து ரத்தம் வழிந்தது. வலியால் அலறி துடித்தான். உடனே அவனை ராமசாமி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் மீட்டு சிகிச்சைக்காக நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றார். அங்கு அவனுக்கு சிகிச்சை அளிக்க துண்டு சீட்டு வழங்கப்பட்டிருந்தது. ஆனால் வெகுநேரமாகியும் அவனை சிகிச்சைக்கு அழைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் மவுலிதரனின் உறவினர்கள் அவனை அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளித்தனர். பின்னர் ஆத்திரம் அடைந்த உறவினர்கள் மவுலிதரனுக்கு சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு உள்ள கோபி ரோட்டில் காலை 10 மணி அளவில் ஒன்று கூடினார்கள். அதைத்தொடர்ந்து ரோட்டில் உட்கார்ந்து மறியலில் ஈடுபட்டார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் கோபி துணை போலீஸ் சூப்பிரண்டு செல்வம், வருவாய் ஆய்வாளர் சுப்பிரமணி மற்றும் போலீசார், ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
அப்போது மவுலிதரனின் உறவினர்கள் கூறும்போது, ‘விபத்தில் காயம் அடைந்த சிறுவன் மவுலிதரனுக்கு சிகி ச்சை அளிக்க நம்பியூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றோம். அங்கு சிகிச்சை அளிக்க சீட்டு வழங்கி வெகு நேரமாக காக்க வைத்தார்கள். ஆனால் சிகி ச்சை அளிக்கவில்லை. இதனால் அருகே உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்தோம். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளு க்கு உரிய சிகிச்சை அளிக்க ப்படுவதில்லை. சிகிச்சை அளிக்க தேவையான மருந்து, பஞ்சு போன்றவற்றை எங்களையே வாங்கி வர கூறுகிறார் கள். எனவே சம்பந்தப்பட்டவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.’ என்றனர். அதற்கு டாக் டர்கள், ‘இனிமேல் நோயாளிகளுக்கு உரிய சிகிச்சை அளிக்கப்படும்’ என்று உறுதி அளித்தனர். அதை ஏற்றுக்கொண்ட மவுலிதரனின் உறவினர்கள் பகல் 11 மணி அளவில் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலை ந்து சென்றார்கள். இதனால் நம்பியூர்-கோபி ரோட்டில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Tags :
Next Story