தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன் அனுப்பப்படும் நீதிபதி பேட்டி
தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பங்கேற்ற நடிகர்களுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்கப்படும் என்று விசாரணை ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் தெரிவித்தார்.
சேலம்,
தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையன்று வீரவிளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. காளைகளை கொடுமைப்படுத்துவதாக பீட்டா அமைப்பினர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடைபெற்றனர். இதை எதிர்த்து தமிழகம் எங்கும் கல்லூரி மாணவ-மாணவிகள், இளைஞர்கள் என எழுச்சி போராட்டம் நடத்தினர்.
மேலும் ஜல்லிக்கட்டுக்கு தமிழக அரசு நிரந்தர சட்டம் இயற்றக்கோரி கடந்த ஜனவரி மாதம் 17-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை தமிழகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்தினர். சேலம் மாநகரில் கடந்த ஜனவரி மாதம் 18-ந் தேதி முதல் போராட்டம் தொடங்கி தொடர்ந்து 6 நாட்கள் நடந்தது.
இந்த போராட்டத்தின்போது ஜனவரி 19-ந் தேதியன்று பெங்களூரு-காரைக்கால் செல்லும் பயணிகள் ரெயில், சேலம் பெரியார் மேம்பாலத்தின்கீழ் சிறை பிடிக்கப்பட்டது. மேலும் ரெயிலும் சேதமாக்கப்பட்டது. போராட்டத்தின்போது வீராணம் சத்யாநகரை சேர்ந்த யோகேஸ்வரன்(வயது17) என்ற வாலிபர் மின்சாரம் தாக்கி பலியானார். இறுதி நாளான 23-ந் தேதி சென்னை மெரினாவில் கலவரம் ஏற்பட்டது. அதேபோல் அலங்காநல்லூர், திருச்சி, மதுரை, கோவை உள்ளிட்ட இடங்களில் போலீசாரின் தடியடி நடைபெற்றது. இது தொடர்பாக விசாரணை நடத்த, விசாரணை ஆணைய தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் நியமிக்கப்பட்டார்.
இதைத்தொடர்ந்து கடந்த பிப்ரவரி மாதம் 16-ந் தேதி ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் சேலத்தில் தனது முதல் கட்ட விசாரணையை நேரில் வந்து தொடங்கினார். போராட்டத்தின்போது காவல்துறையினரின் செயல்பாடு குறித்து விசாரிக்கப்பட்டது. இதுபோல வன்முறை ஏற்பட்ட சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட நகரங்களிலும் அவர் விசாரணை நடத்தினார்.
இந்த நிலையில் நேற்று பிற்பகலில் ராஜேஸ்வரன் சேலம் வந்தார். அவருடன் கமிட்டி செயலாளர் மோகன் உள்பட 5 பேர் வந்தனர். சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகையில் அவர்கள், தங்களது 2-ம் கட்ட விசாரணையை தொடங்கினர். இந்த விசாரணைக்காக 11 பேருக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. அவர்களில் ரவிச் சந்திரன், ராஜேந்திரன், தியாபிலஸ், ரஞ்சித்குமார், கோவிந்தராஜ், சுபாஷ் உள்ளிட்ட உணவு பரிமாறியவர்கள், ஓட்டலில் வேலை செய்தவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. மேலும் எழுத்துப்பூர்வமாக கொடுத்த மனுவும் பெற்றுக்கொள்ளப்பட்டது. அப்போது விசாரணை ஆணைய தலைவரான ராஜேஷ்வரன் நிருபர்களிடம் கூறியதாவது:-
ஜல்லிக்கட்டு கலவரம் தொடர்பாக 1,951 பேர் விசாரணை ஆணையத்திற்கு பிரமாண பத்திரம் அனுப்பி உள்ளனர். இவர்களில் 447 பேருக்கு இதுவரையில் சம்மன் அனுப்பப்பட்டு 108 பேரிடம் விசாரணை நடந்து உள்ளது. விசாரணையின்போது சிலர் நீண்ட நேரம் எடுத்து கொள்கின்றனர். எனவே, விசாரணை முழுமையடைய இன்னும் 8 மாதங்கள் வரை ஆகலாம்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது கருத்துக்கூறிய, பங்கேற்ற நடிகர்களுக்கும், கடந்த ஜனவரி 23-ந் தேதியன்று வன்முறை ஏற்பட்ட சமயத்தில் பணியில் இருந்த காவல்துறை அதிகாரிகளுக்கும் சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடைபெறும். சேலத்தில் ரெயிலை சிறை பிடித்து நடத்திய போராட்டத்தின்போது வாலிபர் ஒருவர் உயிரிழந்தார். அது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் யாரும் விசாரணைக்கு முன்வரவில்லை. கலவரத்தின்போது நடந்த சட்ட மீறல்களுக்கு யார் காரணம்? என்றும், காவல்துறையினர் அத்துமீறி நடந்தனரா? என்பது பற்றியும் விசாரித்து, இனிவரும் காலங்களில் இதுபோன்ற போராட்டங்கள் நடைபெறாமல் இருக்க வழிமுறைகள் பரிந்துரைக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Related Tags :
Next Story