விமானநிலைய விரிவாக்கத்திற்காக பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது
திருச்சி விமான நிலைய விரிவாக்கத்திற்காக பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதியில் நிலம் கையகப்படுத்தும் பணி தொடங்கியது. அந்த பகுதியில் உள்ள 42 வீடுகளை இடித்து அகற்ற அதிகாரிகள் நோட்டீசுகளை வழங்கினார்கள்.
திருச்சி,
திருச்சி விமான நிலையத்தின் ஓடுபாதை (ரன்வே) தற்போது 8 ஆயிரத்து 160 அடி நீளம் உள்ளது. இதனை ‘போயிங்’ ரக விமானங்கள் மற்றும் சரக்கு விமானங்கள் வந்து இறங்கும்வகையில், 12 ஆயிரத்து 500 அடியாக நீட்டிப்பு செய்யப்பட உள்ளது.
மேலும் ரூ.900 கோடியில் புதிய முனையம் கட்டுமான பணியும் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் தொடங்கப்பட இருக்கிறது. இதுபோன்ற திருச்சி விமான நிலைய விரிவாக்க பணிகளுக்காக 630 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி வழங்கும்படி விமான நிலைய ஆணையம் மாநில அரசிடம் கேட்டு இருந்தது.
இந்த 630 ஏக்கர் நிலத்தில் அரசு புறம்போக்கு நிலங்கள், ராணுவத்திற்கு சொந்தமான நிலங்கள் என சுமார் 300 ஏக்கர் நிலம் போக மீதம் உள்ள 330 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்துவதற்கான வேலைகள் ஏற்கனவே தொடங்கி நடந்து வருகிறது.
இந்த நிலங்கள் விமான நிலையத்தின் கிழக்கு பகுதியில் உள்ள திருவெறும்பூர் தாலுகாவை சேர்ந்த கிழக்குறிச்சி, நத்தமாடிப்பட்டி பகுதிகளிலும், விமான நிலையத்தின் மேற்கு பகுதியில் திருச்சி கிழக்கு தாலுகாவில் அடங்கிய பட்டத்தம்மாள் தெரு, ஜே.கே.நகர் அருகில் உள்ள பாரதிநகர் விஸ்தரிப்பு பகுதிகளிலும் அமைந்துள்ளன. விவசாய நிலங்கள், தனியார் பட்டா நிலங்கள் மற்றும் வீடுகள் இவற்றில் உள்ளன.
நிலங்களை கையகப்படுத்துவதற்கான அறிவிப்புகள் சர்வே எண்ணுடன் ஏற்கனவே அரசு அறிவிப்பாக வெளியிடப்பட்டு உள்ளன. கிழக்குறிச்சி, பட்டத்தம்மாள் தெரு பகுதியில் ஏற்கனவே அதிகாரிகள் நிலத்தை கையகப்படுத்தும் பூர்வாங்க பணிகளை செய்வதற்காக சென்றபோது, அந்த பகுதி மக்கள் அதிகாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்தினார்கள். மேலும் காத்திருப்பு போராட்டமும் நடத்தப்பட்டது.
இந்நிலையில் பாரதிநகர் விஸ்தரிப்பில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள பகுதி வீடுகளில் நோட்டீசு வழங்குவதற்காக திருச்சி கிழக்கு தாசில்தார் மணிகண்டன் தலைமையில் வருவாய்த்துறை, நில அளவை துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் நேற்று காலை ஒரு குழுவாக வந்தனர். இவர்களது பாதுகாப்புக்காக பொன்மலை சரக போலீஸ் உதவி கமிஷனர் (பொறுப்பு) சச்சிதானந்தம் தலைமையில் ஏராளமான போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர்.
இந்த குழுவினர் கையகப்படுத்தப்பட உள்ள நிலப்பகுதியில் அமைந்துள்ள வீடுகள் மற்றும் அவற்றுடன் சேர்த்து கட்டப்பட்டு இருந்த கடைகள், கார் பழுது பார்க்கும் பட்டறையில் வசிப்பவர்களிடம் நோட்டீசுகளை வழங்கினார்கள். அந்த நோட்டீசுகளில் விமான நிலைய விரிவாக்கத்திற்காக உங்கள் இடம் தேவைப்படுகிறது.
இதற்கு ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அதிகாரியிடம் தெரிவிக்க வேண்டும் என கூறப்பட்டு இருந்தது. இந்த நோட்டீசை பெரும்பாலானவர்கள் வாங்குவதற்கு மறுத்தனர். வாக்குவாதம் செய்த பின்னர் பெற்றுக்கொண்டனர். சில வீடுகளின் வாசலில் நோட்டீசை அதிகாரிகள் ஒட்டினார்கள். மொத்தம் 42 வீடுகளுக்கு நோட்டீசு வினியோகம் செய்யப்பட்டது. அந்த வீடுகள் அனைத்தும் இடித்து அகற்றப்பட உள்ளன.
நோட்டீசு வழங்கப்பட்ட வீடுகளின் வெளிப்புற பகுதி, வீட்டின் கட்டுமான பரப்பின் உள்பகுதி ஆகியவற்றை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அளவீடு செய்தனர். வீட்டில் உள்ள பொருட்களின் விவரங்களையும் குறித்து வைத்துக்கொண்டனர். ஒவ்வொரு வீட்டிற்கும் மதிப்பீடு செய்வதற்காக அளவு எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காலையில் தொடங்கிய பணி மாலை வரை நீடித்தது. இதனால் அந்த பகுதி பரபரப்பாக இருந்தது.

Related Tags :
Next Story