நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2017 4:15 AM IST (Updated: 17 Nov 2017 3:10 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகர்கோவில்,

தமிழக மீனவர்கள் மீது நடுக்கடலில் துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடலோர காவல்படையை கண்டித்தும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரியும் குமரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்துக்கு குமரி மண்டல செயலாளர் நாகராஜன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ஜெயசீலன், மணிமாறன், ஜான்சிலின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகிகள் தமிழ்ச்செல்வம், ராஜேஸ், சதீஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பப்பட்டன.


Next Story