பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்


பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல்
x
தினத்தந்தி 17 Nov 2017 5:08 AM IST (Updated: 17 Nov 2017 5:08 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் 1½ டன் ரே‌ஷன் அரிசி பறிமுதல். வருவாய் துறை அதிகாரிகளுடன் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.

பள்ளிப்பட்டு,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஆந்திர மாநிலத்திற்கு ரே‌ஷன் அரிசி கடத்தப்படுவதாக பள்ளிப்பட்டு தாசில்தார் தமிழ்செல்விக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அவர் வருவாய் துறை அதிகாரிகளுடன் பள்ளிப்பட்டு பஸ் நிலையத்தில் திடீர் சோதனை நடத்தினார்.

அப்போது ஆந்திராவிற்கு கடத்தி செல்வதற்காக பதுக்கி வைத்திருந்த 1½ டன் ரே‌ஷன் அரிசியை தாசில்தார் பறிமுதல் செய்தார். அவரை கண்டதும் அரிசி மூட்டைகளை கடத்தி வந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். கடத்திச்சென்றவர்களை அதிகாரிகளும், போலீசாரும் தேடிவருகிறார்கள்.


Next Story