கோவில்பட்டியில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரம்


கோவில்பட்டியில் கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரம்
x
தினத்தந்தி 18 Nov 2017 2:30 AM IST (Updated: 17 Nov 2017 6:33 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

கோவில்பட்டி,

கோவில்பட்டியில், கார்த்திகை தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடந்து வருகிறது.

தீப விளக்குகள்

கார்த்திகை மாதம் நேற்று தொடங்கியதை முன்னிட்டு, கோவில்பட்டியில் தீப விளக்குகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகிறது. புதுச்சேரி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பல்வேறு சுவாமிகளின் உருவம் பொறித்த கலைநயத்துடன் கூடிய தீப விளக்குகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டு உள்ளன. இந்த விளக்குகள் களிமண்ணால் செய்யப்பட்டவையாகும்.

விற்பனை மும்முரம்

கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோவில் அருகேயுள்ள கடையில் விநாயகர், லட்சுமி உருவம் பொறித்த 3 அடுக்குகளுடன் கூடிய தீப விளக்கு, வெங்கடாசலபதி உருவம் பொறித்த 5 அடுக்குகளுடன் கூடிய தீப விளக்கு போன்றவை ரூ.400–க்கும், அணையா தீப விளக்கு, சிம்னி தீப விளக்கு போன்றவை ரூ.50–க்கும், பூந்தொட்டி தீப விளக்கு ரூ.200–க்கும், துளசிமாட தீப விளக்கு ரூ.200–க்கும், சிறிய மணிகளுடன் கூடிய தோரணமாலை ரூ.500 முதல் ரூ.700 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

வண்ண கோலப்பொடி

ரூ.1 முதல் ரூ.40 வரையிலான பல்வேறு சிறிய தீப விளக்குகளும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோன்று நவீன வண்ண கோலப்பொடி 100 மி.லி. ரூ.5–க்கும், ஒரு படி ரூ.60–க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அவற்றை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.


Next Story