சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்


சர்க்கரை ஆலைகள் நிலுவை தொகையை வழங்கக்கோரி கரும்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Nov 2017 10:45 PM GMT (Updated: 2017-11-18T00:21:35+05:30)

சர்க்கரை ஆலைகள் கரும்புக்கான நிலுவை தொகையை வழங்கக்கோரி ஈரோட்டில் கரும்பு விவசாயிகள் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஈரோடு,

தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஈரோடு வீரப்பன்சத்திரம் பஸ் நிறுத்தம் அருகில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில செயலாளர் டி.பி.கோபிநாத் தலைமை தாங்கினார். துணை தலைவர் செ.நல்லாக்கவுண்டர் முன்னிலை வகித்தார். பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன், துணை தலைவர் ஏ.எம்.முனுசாமி ஆகியோர் பேசினார்கள்.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய ரூ.257 கோடி நிலுவை தொகையை உடனடியாக வழங்க வேண்டும். மேலும் கூட்டுறவு மற்றும் பொதுத்துறை ஆலைகள் தரவேண்டிய ரூ.220 கோடி கரும்பு பண பாக்கியையும் தரவேண்டும். 2017– 2018–ம் ஆண்டு பருவ கரும்புக்கு பரிந்துரை விலையை அறிவிக்க வேண்டும். வருவாய் பங்கீட்டு முறையை அமல்படுத்தக்கூடாது என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் கரும்பு சோகைகளை கையில் பிடித்தபடி கோரிக்கைகள் குறித்து கோ‌ஷங்கள் எழுப்பினார்கள்.

இதில் மாவட்ட தலைவர் சுப்பையன், செயலாளர் தேவண்ணசாமி, பொருளாளர் வெங்கடாசலம், துணை தலைவர்கள் சுப்பிரமணியம், திருமூர்த்தி, முன்னாள் செயலாளர் முத்துசாமி, துணை செயலாளர்கள் விஜயகுமார், இளங்கோ உள்பட ஏராளமான கரும்பு விவசாயிகள் கலந்து கொண்டார்கள்.


Next Story