சேத்தியாத்தோப்பு அருகே திருமணமான 2 மாதத்தில் பெண் என்ஜினீயர் மீது தாக்குதல்


சேத்தியாத்தோப்பு அருகே திருமணமான 2 மாதத்தில் பெண் என்ஜினீயர் மீது தாக்குதல்
x
தினத்தந்தி 18 Nov 2017 2:45 AM IST (Updated: 18 Nov 2017 12:37 AM IST)
t-max-icont-min-icon

சேத்தியாத்தோப்பு அருகே திருமணமான 2 மாதத்தில் கூடுதல் வரதட்சணை கேட்டு பெண் என்ஜினீயரை தாக்கி துன்புறுத்தியதாக அவரது கணவர் உள்பட 10 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர்.

சேத்தியாத்தோப்பு,

சேத்தியாத்தோப்பு அருகே உள்ள துறஞ்சிகொல்லையை சேர்ந்தவர் மோகன். இவருடைய மகன் இளம்வழுதி(வயது 40). இவர் சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் வேலை செய்து வருகிறார். இவருக்கும், குள்ளஞ்சாவடியை சேர்ந்த தட்சிணாமூர்த்தி மகள் என்ஜினீயரான உஷாதேவிக்கும் கடந்த 8.9.2017 அன்று திருமணம் நடைபெற்றது. திருமணத்தின்போது தட்சிணாமூர்த்தி 35 பவுன் நகைகள், ரூ.5 லட்சம் ரொக்கமும் வரதட்சணையாக கொடுத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூடுதலாக 5 பவுன் நகையும், ரூ.1 லட்சம் ரொக்கமும் கேட்டு இளம்வழுதியின் குடும்பத்தினர் உஷாதேவியை தாக்கி, துன்புறுத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் உஷாதேவி புகார் கொடுத்தார். அதன்பேரில் இளம்வழுதி, மோகன் உள்பட 10 பேர் மீது இன்ஸ்பெக்டர் கிருஷ்ணவேணி வழக்குப்பதிவு செய்துள்ளார்.

இது பற்றி அறிந்ததும் தலைமறைவான அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story