மேம்பாலத்தில் இருந்து சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்


மேம்பாலத்தில் இருந்து சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்தது டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 18 Nov 2017 12:06 AM GMT (Updated: 18 Nov 2017 12:06 AM GMT)

பெங்களூருவில் மேம் பாலத்தில் இருந்து சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்ததில் டிரைவர் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தார்கள். இதில் 100-க்கும் மேற்பட்ட கோழிகளும் செத்தன. அதனை சிலர் தூக்கிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு, நவ.

பெங்களூரு யஷ்வந்தபுரம் மேம்பாலத்தில் நேற்று காலை 7 மணியளவில் கோழிகளை ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு வேன் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன், மேம்பால ரோட்டில் தாறுமாறாக ஓடியது. பின்னர் திடீரென்று மேம்பாலத்தில் இருந்து அந்த சரக்கு வேன் கவிழ்ந்து கீழே உள்ள சாலையில் விழுந்தது. இதனால் டிரைவர் உள்பட 3 பேர் மினிலாரிக்குள் சிக்கி கொண்டு உயிருக்கு போராடினார்கள்.

மேலும் சரக்கு வேனில் இருந்த 100-க்கும் மேற்பட்ட கோழிகளும் செத்தன. இதுபற்றி அறிந்ததும் யஷ்வந்தபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் டிரைவர் உள்பட 3 பேரையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே செத்த கோழிகளை சிலர் போட்டிப்போட்டுக் கொண்டு எடுத்துச் சென்றனர். இதனால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story