பாரீசின் இரண்டாவது புகழ்பெற்ற அடையாளம்!
பாரீஸ் என்றதும் அங்கு நெடிதுயர்ந்து நிற்கும் ஈபிள் கோபுரம்தான் நமது நினைவுக்கு வரும். அதற்கு அடுத்து அங்கு பிரபலமானது, சாம்ப்ஸ் எலிசீஸ் பிரதான சாலை ஆகும்.
பாரீஸ் நகரின் மேற்குப் பகுதியில் சீன் நதிக்கு வலதுபுறமாக அமைந்துள்ள சாம்ப்ஸ் எலிசீஸ் பிரதான சாலை, உலகிலேயே மிக அழகான பிரதான சாலை என வர்ணிக்கப்படுகிறது.
இது, ‘ஆர்க் டி டிரைகோம்ப்’ எனப்படும் பாரீஸ் வெற்றி வளைவுக்கும், கன்கார்டுக்கும் இடையில் அமைந்துள்ளது.
ஆண்ட்ரே லி நாட்ரே என்ற கட்டிடக் கலைஞரால் இப்பிரதான சாலை 1670-ம் ஆண்டில் வடிவமைக்கப்பட்டது.
ஒவ்வோராண்டும் ஆகஸ்டு 14 அன்று பிரெஞ்சு குடியரசு தினக் கொண்டாட்டங்களின்போது, இவ்வீதியில் சகல ராணுவப் படையினரின் அணிவகுப்புகளும் நடைபெறும். 1789-ம் ஆண்டில் நடைபெற்ற ராணுவப் புரட்சிக்குப் பின்னர் இந்த வீதி மிகவும் முக்கியத்துவம் பெற்றது.
இன்று மிகவும் மதிப்புமிக்க பிரதேசமாக கணிக்கப்படும் இந்தப் பகுதியில் பல முக்கிய தேசிய, சர்வதேச நிறுவனங்களின் அலுவலகங்களும், ஆடம்பரமான வர்த்தக நிலையங் களும், உணவகங்களும், திரை அரங்குகள் மற்றும் விமான சேவை நிறுவனங்களும் உள்ளன.
கடந்த 2000-ம் ஆண்டு பாரீஸ் மாநகராட்சி, இந்தச் சாலையில் மரங்களை நட்டும், நடைபாதைகளை விரிவாக்கியும் பொதுமக்களுக்கான வசதியை அதிகரித்திருக்கிறது.
பாரீஸ் நகரவாசிகள் ஒவ்வொருவரும் பெருமையோடு கூறத்தக்கதாக இந்த ‘சாம்ப்ஸ் எலிசீஸ்’ பிரதான சாலை உள்ளது.
Related Tags :
Next Story