கோவில்பட்டியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட மாநாடு தொடங்கியது
கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 9–வது மாநாடு நேற்று காலையில் தொடங்கியது.
கோவில்பட்டி,
கோவில்பட்டி சவுபாக்கியா மகாலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தூத்துக்குடி மாவட்ட 9–வது மாநாடு நேற்று காலையில் தொடங்கியது.
மாவட்ட செயற்குழு உறுப்பினர் குமாரவேல் கட்சி கொடியேற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். வரவேற்பு குழு தலைவர் சின்னதம்பி வரவேற்றார். மத்திய குழு உறுப்பினர் சம்பத் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார்.
மாவட்ட செயலாளர் அர்ச்சுணன், மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ், மாநில குழு உறுப்பினர் மல்லிகா, நகர செயலாளர் முருகன், ஒன்றிய குழு உறுப்பினர்கள் மணி, தெய்வேந்திரன், கிருஷ்ணவேணி, ஒன்றிய செயலாளர் ஜோதிபாசு, விவசாய சங்க மாவட்ட தலைவர் பெருமாள், இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் அமர்நாத், மாவட்ட செயலாளர் சுரேஷ்பாண்டி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் முத்து உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாநாடு நடக்கிறது.