போடி அருகே இரட்டைக்கொலை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது


போடி அருகே இரட்டைக்கொலை: குண்டர் தடுப்பு சட்டத்தில் ஒருவர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2017 3:15 AM IST (Updated: 19 Nov 2017 12:44 AM IST)
t-max-icont-min-icon

கேரள மாநிலம் எல்லப்பட்டி கே.கே.டிவிசன் எஸ்டேட்டை சேர்ந்த தங்கமுத்து ஜான்பீட்டர் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி மணப்பட்டி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

போடி,

கேரள மாநிலம் எல்லப்பட்டி கே.கே.டிவிசன் எஸ்டேட்டை சேர்ந்த தம்பிதுரை மகன் தங்கமுத்து என்ற சரவணன் (வயது 19), ஆபிரகாம் மகன் ஜான்பீட்டர் (18). ஆட்டோ டிரைவர்களான இவர்கள் கடந்த அக்டோபர் மாதம் 15–ந் தேதி அதிகாலையில் போடிமெட்டு மலைப்பாதையில் மணப்பட்டி என்ற இடத்தில் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தனர்.

 இந்த கொலை வழக்கில் நெல்லை மாவட்டம் மானூர் அருகே உள்ள அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த கணபதி மகன் மணி என்ற எஸ்டேட் மணி (38) என்பவர் கோர்ட்டில் சரணடைந்தார். அவரை போடி குரங்கணி போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர். அதன்பேரில் கேரள மாநிலம் எல்லப்பட்டியை சேர்ந்த வேலுச்சாமி மகன் செல்லத்துரை (54) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில் மணி என்ற எஸ்டேட் மணி மீது 10–க்கும் மேற்பட்ட கொலை வழக்குகள் உள்ளிட்ட 30 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

 இதனையடுத்து மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் பரிந்துரை செய்தார். அதன் பேரில் மணியை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கலெக்டர் வெங்கடாசலம் உத்தரவிட்டார். இதனையடுத்து மணி கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story