அவினாசி அருகே குடோனில் தீ விபத்து; பொருட்கள் எரிந்து நாசம்
அவினாசி கைகாட்டி புதூரில் பாத்திர கடை பழைய பொருட்கள் மற்றும் பழைய செய்திதாள்கள் குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு அங்கிருந்த பழைய பொருட்கள் எரிந்தன.
அவினாசி,
அவினாசி கைகாட்டி புதூரில் பாத்திர கடை நடத்திவருபவர் ரத்தினவேல் (வயது 47). இவருக்கு அவினாசியை அடுத்துள்ள அவினாசிலிங்கம் பாளையத்தில் ஒரு குடோன் உள்ளது. இந்த குடோனில் தேவையற்ற டயர்கள், பழைய பொருட்கள் மற்றும் பழைய செய்திதாள்கள் போன்றவற்றை போட்டு வைத்திருந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் இந்த குடோனில் திடீரென தீ விபத்து ஏற்பட்டு, அங்கிருந்த பழைய பொருட்கள் எரிந்து கொண்டிருந்தன. இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் அவினாசி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். உடனே சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர், சுமார் அரைமணி நேரம் போராடி தீயை முற்றிலும் அணைத்தனர். தீ விபத்துக்கான காரணம் தெரியவில்லை. இந்த தீ விபத்தில் சுமார் ரூ.3 ஆயிரம் மதிப்பிலான பழைய பொருட்கள் எரிந்து நாசமானது.
Related Tags :
Next Story