ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகைகள், கார் திருடிய வழக்கில் வாலிபர் கைது


ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகைகள், கார் திருடிய வழக்கில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 19 Nov 2017 3:45 AM IST (Updated: 19 Nov 2017 2:45 AM IST)
t-max-icont-min-icon

திருச்செங்கோட்டில் ஓய்வு பெற்ற ஆசிரியை வீட்டில் நகைகள், கார் திருடிய வழக்கில் சேலத்தை சேர்ந்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்செங்கோடு,

திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலனியை சேர்ந்தவர் தமிழ்செல்வி(வயது67). ஓய்வுபெற்ற ஆசிரியையான இவர் கடந்த ஜூலை மாதம் 27–ந்தேதி வீட்டை பூட்டி விட்டு கணவர் செங்கோட்டையனுடன் வெளியில் சென்று இருந்தார். அப்போது மர்ம ஆசாமிகள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து 40 பவுன் நகைகள், கலர் டி.வி., வெளியில் நிறுத்தியிருந்த கார் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர். இதுகுறித்து தமிழ்செல்வி கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் இன்ஸ்பெக்டர் பாரதிமோகன் தலைமையில் போலீசார் கைலாசம்பாளையம் பஸ் நிறுத்தம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

கைது

அப்போது சந்தேகத்துக்கிடமாக அந்த வழியாக வந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் சேலம் கன்னங்குறிச்சி காந்திநகர் பகுதியை சேர்ந்த கண்ணன்(30) என்பதும், ஓய்வு பெற்ற ஆசிரியை தமிழ்செல்வி வீட்டில் திருட்டில் ஈடுபட்டவர் என்பதும் தெரியவந்தது. அவர் கொடுத்த தகவலின் பேரில் திருடப்பட்ட கார் மற்றும் டி.வி. மீட்கப்பட்டது. இதைத்தொடர்ந்து போலீசார் கண்ணனை கைது செய்து நகைகள் குறித்த விவரங்கள் தொடர்பாக துருவித்துருவி விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த வழக்கில் மேலும் சிலருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.


Next Story