ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி


ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 18 Nov 2017 10:45 PM GMT (Updated: 18 Nov 2017 9:19 PM GMT)

ஆரணி கமண்டல நாகநதியில் வெள்ளப்பெருக்கு விவசாயிகள் மகிழ்ச்சி

ஆரணி,

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்த நிலையில் படவேடு, ஜவ்வாதுமலை தொடர்ச்சியில் நேற்று முன்தினம் பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக ஆரணி கமண்டல நாகநதியில் நேற்று அதிகாலையில் இருந்து திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆற்றின் இருகரையும் தொட்டபடி தண்ணீர் பாய்ந்து ஓடுகிறது.

இதனால் சேவூர் பைபாஸ் சாலையில் உள்ள ஆற்று தடுப்பணையிலும், ஆரணி- செய்யாறு சாலையில் புதுப்பேட்டை ஆற்று பகுதியில் அமைந்துள்ள தடுப்பணையிலும் முழு கொள்ளவும் எட்டியபடி தண்ணீர் பாய்ந்தோடுகிறது.

இதனை பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பார்த்து மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் மலர்தூவி வரவேற்றனர். 

Next Story