தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.136 கோடி பயிர்க்கடன் அமைச்சர் துரைக்கண்ணு பேச்சு
தஞ்சை மாவட்டத்தில் விவசாயிகளுக்கு ரூ.136 கோடி பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது என்று கூட்டுறவு வாரவிழாவில் அமைச்சர் துரைக்கண்ணு கூறினார்.
தஞ்சாவூர்,
தஞ்சையில் 64-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். எம்.பி.க்கள் பரசுராமன், பாரதிமோகன், சேகர் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம் வரவேற்றார். தஞ்சை மண்டல இணைப்பதிவாளர் ஏகாம்பரம் திட்ட விளக்க உரை ஆற்றினார்.
விழாவில் வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு கலந்து கொண்டு ரூ.10 கோடி மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கியும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கு கேடயம் வழங்கியும் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா கல்வி, வேளாண்மைக்கு அதிக முக்கியத்துவம் அளித்தார். இதே போல கூட்டுறவுத்துறைக்கும் அதிக முக்கியத்தும் கொடுத்து இந்தியாவில் முதல் இடத்துக்கு அதனை கொண்டு சென்றார். விவசாயிகளின் நலன் கருதி ரூ.5 ஆயிரத்து 618 கோடிக்கு கடனை தள்ளுபடி செய்தார். ரூ.7 ஆயிரம் கோடி புதிய கடன்கள் வழங்க நிதி ஒதுக்கினார். இதில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி வழங்கப்பட்டது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 29 ஆயிரத்து 787 விவசாயிகளுக்கு ரூ.233 கோடியே 7 லட்சம் வழங்கப்பட்டது.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா வழியில் ஆட்சி செய்து வரும் எடப்பாடி பழனிசாமியும் குறுவை, சம்பா தொகுப்பு திட்டங்களும், மானியங்களும் வழங்கி வருகிறார். தஞ்சை மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 23 ஆயிரத்து 622 விவசாயிகளுக்கு ரூ.136 கோடியே 43 லட்சம் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது. பயிர்க்காப்பீட்டு திட்டத்தில் தஞ்சை மாவட்டத்துக்கு ரூ.215 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில் இதுவரை ரூ.142 கோடியை அரசும், காப்பீட்டு நிறுவனமும் வழங்கி உள்ளது. மீதமுள்ள பயிர் காப்பீட்டு தொகை விரைவில் பெற்று வழங்கப்படும்.
தஞ்சை மாவட்டத்தில் கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 74 ஆயிரத்து 353 விவசாயிகளுக்கு ரூ.7 கோடியே 8 லட்சத்து 99 ஆயிரம் பயிர் காப்பீடாக பிரீமியம் செலுத்தப்பட்டுள்ளது. எனவே வருங்காலத்தில் விவசாயிகளின் நலன் கருதி அவர்களை புதிய பயிர்காப்பீட்டு திட்டத்தில் சேர்க்க கூட்டுறவுத்துறை அலுவலர்கள் உதவ வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
விழாவில் வைத்திலிங்கம் எம்.பி. கலந்து கொண்டு பேசினார். விழாவில் மாவட்ட பால்வள தலைவர் காந்தி, கும்பகோணம் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ஆசைமணி, தஞ்சை மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர் மோகன், நிக்கல்சன் கூட்டுறவு வங்கி தலைவர் அறிவுடைநம்பி, துணைத்தலைவர் புண்ணியமூர்த்தி, இயக்குனர் வக்கீல்சரவணன், கல்விப்புரவலர் ரமேஷ், இணைப்பதிவாளர் உமாமகேஸ்வரி, நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர் பண்டரிநாதன், கரந்தை திராவிட கூட்டுறவு வங்கி தலைவர் பஞ்சாபகேசன், துணைப் பதிவாளர்கள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் துணைப்பதிவாளர் நாகராஜன் நன்றி கூறினார்.

Related Tags :
Next Story