செங்குன்றம் அருகே மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்தான்


செங்குன்றம் அருகே மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்தான்
x
தினத்தந்தி 19 Nov 2017 3:29 AM IST (Updated: 19 Nov 2017 3:29 AM IST)
t-max-icont-min-icon

மாயமான சிறுவன் கிணற்றில் பிணமாக கிடந்தான். நேற்று நள்ளிரவு ஜெயபால் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த தண்டல்கழனி, பட்டுக்கோட்டை அழகிரி தெருவைச் சேர்ந்தவர் ஜெயக்குமார். இவரது மகன் ஜெயபால் (வயது15). புழலில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 9–ம் வகுப்பு படித்துவந்தான். இவனுக்கு வலிப்பு நோய் இருந்ததால் பள்ளிக்கு அனுப்பாமல் பெற்றோர் வீட்டிலேயே வைத்திருந்தனர்.

நேற்று முன்தினம் கடைக்கு செல்வதாக கூறி வெளியே சென்ற ஜெயபால் இரவு வரை வீட்டுக்கு வரவில்லை. இதனால் பெற்றோர் பல இடங்களில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து ஜெயக்குமார் செங்குன்றம் போலீசில் புகார் செய்தார்.

இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள கிணறு அருகே ஜெயபாலின் செருப்பு கிடந்தது. இதனால் அவன் கிணற்றுக்குள் விழுந்திருப்பானோ? என்ற சந்தேகத்தில் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் கிணற்றுக்குள் இறங்கி தேடினர். நேற்று நள்ளிரவு ஜெயபால் உடல் கிணற்றில் இருந்து மீட்கப்பட்டது.

அவன் கடைக்கு சென்றபோது வலிப்பு ஏற்பட்டு கிணற்றுக்குள் விழுந்தானா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story