பெண்ணின் வயிற்றில் இருந்த 115 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்


பெண்ணின் வயிற்றில் இருந்த 115 கட்டிகள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
x

மும்பை கோவண்டியை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் கடந்த சில வருடங்களாக தாய்மை அடைய முடியாமல் தவித்து வந்தார்.

மும்பை,

மும்பை கோவண்டியை சேர்ந்தவர் ரேஷ்மா. இவர் கடந்த சில வருடங்களாக தாய்மை அடைய முடியாமல் தவித்து வந்தார். இதனால் ரேஷ்மாவை அவரது கணவர் நேரலில் உள்ள மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்து சென்று உள்ளார். அங்கு நடத்திய சோதனையில் ரேஷ்மாவின் கர்ப்பபையை சுற்றி கட்டிகள் வளர்ந்து இருப்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் முடிவு செய்தனர்.

பின்னர் டாக்டர் நந்தவார் தலைமையில் ரேஷ்மாவிற்கு அறுவை சிகிச்சை செய்தனர். சுமார் 2 மணி நேரம் நடந்த அறுவை சிகிச்சையில் கர்ப்பபையை சுற்றி இருந்த 115 நீர்க்கட்டிகளை அகற்றினர். இந்த கட்டிகள் அனைத்தும் 2 மில்லி மீட்டர் முதல் 10 மில்லி மீட்டர் வரை இருந்தது. இது குறித்து டாக்டர் தெரிவிக்கையில், ஏற்கனவே நமது நாட்டில் நடந்த அறுவை சிகிச்சையில் 108 கட்டிகள் தான் அகற்றப்பட்டு உள்ளது. தற்போது ரேஷ்மாவிற்கு நடந்த அறுவை சிகிச்சையில் 115 கட்டிகள் அகற்றப்பட்டு உள்ளது என்றார்.


Next Story