சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் சோதனை ஓட்டம்
ரூ.26.77 கோடியில் கட்டப்பட்ட சேலம் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் நேற்று வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
சேலம்,
சேலம் மாநகரில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சேலம் குரங்குச்சாவடியில் இருந்து 5 ரோடு, புதிய பஸ்நிலையம் வழியாக 4 ரோடு வரையிலும், ஏ.வி.ஆர்.ரவுண்டானாவில் இருந்து 5 ரோடு வழியாக சாரதா கல்லூரி வரையிலும், லீபஜாரில் இருந்து செவ்வாய்பேட்டை வரையிலும், திருவாக்கவுண்டனூர் பைபாஸ் பகுதியில் என பல்வேறு இடங்களில் ரூ.800 கோடிக்கு மேல் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
இதில் குறிப்பாக சேலம்-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் திருவாக்கவுண்டனூர் பகுதியில் ரூ.26.77 கோடியில் மேம்பாலம் அமைக்கும் பணிக்காக கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பூமி பூஜை நடந்தது. இந்த மேம்பாலம் அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தில் வாகனங்களை இயக்கி சோதனை ஓட்டம் நடத்த நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் முடிவு செய்திருந்தனர்.
இதையடுத்து நேற்று காலை முதல் புதிதாக அமைக்கப்பட்ட மேம்பாலத்தில் பஸ், லாரி, கார் என அனைத்து வாகனங்களையும் இயக்கி சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது. நெல்லை, மதுரை உள்பட தென் மாவட்டங்களில் இருந்தும், திருச்சி, கோவை, ஈரோடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து பெங்களூருவுக்கு செல்லும் வாகனங்கள் அனைத்தும் இந்த மேம்பாலம் வழியாக செல்ல அனுமதிக்கப்பட்டன.
இந்த சோதனை ஓட்டம் சில நாட்கள் நடத்தப்படும் என்றும், மேம்பாலத்தின் தரத்தை பரிசோதனை செய்யும் வகையிலும், ஏதாவது குறைகளை இருந்தால் அதை உடனடியாக நிவர்த்தி செய்யும் வகையிலும் தற்போது சோதனை ஓட்டம் நடத்தப்படுவதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சேலத்தில் புதிதாக கட்டிமுடிக்கப்பட்ட திருவாக்கவுண்டனூர் மேம்பாலத்தை விரைவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்க உள்ளார் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Related Tags :
Next Story