சித்தராமையாவின் உத்தரவின் பேரில் பா.ஜனதாவினர் மீது பொய் வழக்கு
முதல்–மந்திரி சித்தராமையாவின் உத்தரவின் பேரில் பா.ஜனதாவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக ஈசுவரப்பா குற்றம் சாட்டியுள்ளார்.
சித்ரதுர்கா,
சித்ரதுர்காவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு கர்நாடக மேல்–சபை எதிர்க்கட்சி தலைவர் ஈசுவரப்பா பேசியதாவது:–
முதல்–மந்திரி சித்தராமையா தனது அதிகார பலத்தால் பா.ஜனதாவினரை ஒடுக்க நினைக்கிறார். சித்தராமையாவின் உத்தரவின் பேரிலேயே பா.ஜனதாவினர் மீது பொய் வழக்குகள் போடப்படுகிறது. சித்தராமையா சொல்வதை கேட்டு போலீசாரும் பொய் வழக்குகளை பா.ஜனதாவினர் மீது போடுகின்றனர். அவ்வாறு பொய் வழக்குகள் போடும் போலீஸ் நிலையங்கள் முற்றுகையிடப்படும்.பா.ஜனதாவினர் மீது இனியும் பொய் வழக்குகள் போடுவதை பொறுத்துக் கொள்ள முடியாது. அதனை உடனே நிறுத்த வேண்டும். அவ்வாறு பொய் வழக்குகள் போட்டால் பா.ஜனதா சார்பில் தீவிர போராட்டம் நடத்தப்படும் என்று சித்தராமையாவை எச்சரிக்கிறேன்.
இவ்வாறு ஈசுவரப்பா பேசினார்.
Related Tags :
Next Story