கர்நாடக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?


கர்நாடக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா?
x
தினத்தந்தி 19 Nov 2017 4:54 AM IST (Updated: 19 Nov 2017 4:54 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா? என்பது குறித்து முதல்–மந்திரி சித்தராமையா பதிலளித்துள்ளார்.

பெங்களூரு,

முதல்–மந்திரி சித்தராமையா நேற்று தாவணகெரே மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அங்கு  சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

பின்னர் அவரிடம் கர்நாடக சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடத்தப்படுமா? என்பது குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதற்கு பதிலளித்து அளித்து முதல்–மந்திரி சித்தராமையா கூறியதாவது:–

எனது தலைமையில் சட்டசபை தேர்தலை காங்கிரஸ் சந்திக்கும். எனது தலைமையிலான அரசு 5 ஆண்டுகள் முழுமையாக நிறைவு செய்யும். சட்டசபை தேர்தல் ஏப்ரல் அல்லது மே மாதம் நடைபெறும். தேர்தலை முன்கூட்டியே நடத்த எந்த திட்டமும் இல்லை. சட்டசபை தேர்தல் முன்கூட்டியே நடைபெறுவதற்கு சாத்தியமில்லை. அடுத்த ஆண்டு (2018) பிப்ரவரி மாதம் பட்ஜெட் தாக்கல் செய்ய உள்ளேன். அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் சட்டசபை தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் தயாரிக்கப்படும்.

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று விடலாம் என்று நினைத்து எடியூரப்பா யாத்திரை மேற்கொண்டுள்ளார். அந்த யாத்திரையை பா.ஜனதாவினரே ஆதரிக்கவில்லை. அப்படி இருக்கும் போது எடியூரப்பா மேற்கொண்டு வரும் யாத்திரை எப்படி வெற்றி பெறும். அந்த யாத்திரை தொடங்கும் போதே தோல்வி அடைந்து விட்டது. பா.ஜனதாவினர் உண்மை பேசுவதே இல்லை. பா.ஜனதா கட்சியை பற்றி மக்கள் நன்கு அறிந்துள்ளனர். தேர்தலின் போது பா.ஜனதாவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story