மதிப்பைக் கூட்டிய மங்கை
குர்தேவ் கவுர், பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர். இவரும், இவருடைய கணவரும் அரசு ஊழியர்களாக பணி புரிந்தவர்கள்.
குர்தேவ் கவுர், பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்தவர். இவரும், இவருடைய கணவரும் அரசு ஊழியர்களாக பணி புரிந்தவர்கள். குர்தேவ் கவுர், கணக்கு ஆசிரியையாக வேலை பார்த்து வந்தார். கணவர் ஓய்வு பெற்ற பிறகு குர்தேவும் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். அவருடைய பூர்வீக கிராமத்தில் இரண்டரை ஏக்கர் விவசாய நிலம் இருந்தது. அதில் விவசாயம் செய்ய குர்தேவ் கவுர் முடிவெடுத்தார். ஆனால் போதிய விவசாய அனுபவம் ஏதும் இல்லை என்பதால் முறையாக பயிற்சி பெற திட்டமிட்டு, பஞ்சாப் வேளாண்மை பல்கலைக்கழகத்தில் இரண்டு மாதங்கள் விவசாய பயிற்சி பெற்றார். அங்கு காய்கறிகள், பயிர்களை பயிரிடும் முறை மட்டுமின்றி விளை பொருட்களை எப்படி விற்பனை செய்ய வேண்டும் என்பது குறித்த சந்தைப்படுத்துதல் பற்றியும் அறிந்து கொண்டார்.
ஆரம்பத்தில் குர்தேவ் கவுர் காலிபிளவர், கேரட், மிளகாய், மஞ்சள், இஞ்சி, எலுமிச்சை, கரும்பு, நெல் போன்றவற்றை இயற்கை விவசாய முறையில் பயிரிட்டு இருக்கிறார். அத்துடன் தேனீ வளர்ப்பிலும் ஈடுபட்டிருக்கிறார். நெல்லிக்கனி மற்றும் தோட்டத்தில் விளைந்த காய்கறிகளை விற்பனை செய்து வந்திருக்கிறார். அதில் குறைந்த லாபமே கிடைத்திருக்கிறது. இதையடுத்து அவைகளை மதிப்புக்கூட்டு பொருட்களாக தயாரிக்க தொடங்கிவிட்டார். ஊறுகாய் வகைகளை தயாரித்து அவைகளை நேரடியாக விற்பனை செய்து வருகிறார். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது.
விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிக்கவும், விற்பனையை விரிவுபடுத்தவும் பெண் சுய உதவி குழுக்களை உருவாக்கினார். அவருடைய பகுதியை சேர்ந்த பெண்கள் விவசாய குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் ஆர்வமாக குர்தேவின் முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறார்கள். அவர்களுக்கு முறையாக பயிற்சி அளித்து களம் இறக்கிவிட்டார். இப்போது 300 பெண்கள் அந்த குழுவில் அங்கம் வகிக்கிறார்கள். அவர்கள் விவசாய விளைபொருட்களை மதிப்புக்கூட்டு பொருட் களாக உருமாற்றி சந்தையிலும், கண்காட்சியிலும் விற்பனை செய்து வருகிறார்கள்.
அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகளும் குர்தேவ் கவுருடன் இணைந்திருக்கிறார்கள். அவர்களும் குழுவாக ஒன்றிணைந்து விவசாய பணிகளை மேற்கொள்ளத் தொடங்கி இருக்கிறார்கள். தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சுய உதவிக்குழுக்கள் மூலம் விற்பனை செய்தும் வருகிறார்கள். குர்தேவ் கவுரின் முயற்சிக்கு பல தரப்பில் இருந்தும் பாராட்டு கிடைத்திருக்கிறது. மாநில அரசு விருதும் பெற்றிருக்கிறார். இப்போது குர்தேவ் கவுரின் விவசாய அமைப்பு ஆண்டுக்கு 40 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறது. அவரது தலைமையில் இயங்கும் சுய உதவிக்குழு பெண்களும் மாதம் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை சம்பாதிக்கிறார்கள்.

Related Tags :
Next Story