அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கொடைக்கானல்,
கொடைக்கானல் மூஞ்சிக்கல் பஸ் நிலையம் அருகே நகர, ஒன்றிய தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதற்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளரும், நகரசபை முன்னாள் தலைவருமான முகமது இபுராகிம், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கணேசன், துணை அமைப்பாளர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில், நகர் மற்றும் ஒன்றிய பகுதிகளில் உள்ள சாலை சேதமடைந்துள்ளது. அதனை உடனே சீரமைக்க வேண்டும். நகர் பகுதியில் சாக்கடை கால்வாய், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வேண்டும். கீழ் குண்டாறு திட்டத்தை விரைவில் செயல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் கருமலைபாண்டி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story