ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு


ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு
x
தினத்தந்தி 19 Nov 2017 10:45 PM GMT (Updated: 19 Nov 2017 9:48 PM GMT)

ஆண்டிப்பட்டி அருகே பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

கண்டமனூர்,

ஆண்டிப்பட்டி அருகே உள்ள முத்துசங்கிலிபட்டியை சேர்ந்தவர் தங்கமணி. இவருடைய மனைவி தவமணி (வயது 23). இவர் வாய்பேச முடியாதவர் ஆவார். இவர் தினந்தோறும் மாட்டுக்கு புல் அறுக்க செல்வது வழக்கம். நேற்று வழக்கம் போல் புல் அறுப்பதற்காக அரிவாளுடன் சுப்பையா என்பவருடைய தோட்டத்துக்கு அருகே சென்றுள்ளார். அப்போது சுப்பையா மனைவி கதிரவள்ளிக்கும், தவமணிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த கதிரவள்ளி தான் வைத்து இருந்த அரிவாளால் தவமணியை வெட்டியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இதுகுறித்து ராஜதானி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

Next Story