நெல்லை விழாவுக்கு கூடுதல் வாகனங்களில் வந்ததாக புகார்: டி.டி.வி. தினகரன் மீது வழக்கு


நெல்லை விழாவுக்கு கூடுதல் வாகனங்களில் வந்ததாக புகார்: டி.டி.வி. தினகரன் மீது வழக்கு
x
தினத்தந்தி 20 Nov 2017 4:30 AM IST (Updated: 20 Nov 2017 3:39 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை விழாவுக்கு கூடுதல் வாகனங்களில் வந்ததாக அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டுள்ளது.

நெல்லை,

நெல்லை பொருட்காட்சி திடலில் உள்ள வ.உ.சி. மணிமண்டபத்தில் நேற்று முன்தினம் வ.உ.சி. நினைவு நாள் விழா நடந்தது. இதில் அ.தி.மு.க. (அம்மா அணி) துணை பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொண்டு வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள டி.டி.வி. தினகரன் கடந்த 17-ந்தேதியே தூத்துக் குடியில் வந்து தங்கி இருந்தார். பின்னர் நேற்று முன்தினம் காரில் புறப்பட்டு நெல்லைக்கு வந்து சென்றார். இதற்காக தூத்துக்குடி மற்றும் நெல்லை, பாளையங்கோட்டை கே.டி.சி. நகர் முதல், பொருட் காட்சி திடல் வரை சாலையின் இருபுறமும் வரவேற்பு பேனர் கள் வைக்கப்பட்டிருந்தன. மேலும் ரோட்டின் நடுவே உள்ள இரும்பு தடுப்பு கம்பிகளில் கட்சி கொடிகளும் கட்டப்பட்டு இருந்தன.

இதற்கிடையே அனுமதி பெறாமல் அளவுக்கு அதிக மாக டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாகவும், அவற்றை அகற்றக் கோரியும், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதர வாளர்கள் மாநகர போலீஸ் கமிஷனர், கலெக்டர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் அலுவலகங்களில் மனு கொடுத்தனர்.

இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில், டி.டி.வி. தினகரன், அமைப்பு செயலாளர் கல்லூர் வேலாயுதம், மாநகர மாவட்ட செயலாளர் பாப்புலர் முத்தையா மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதாவது அனுமதிக்கப்பட் டதை விட, 200-க்கும் மேற் பட்ட வாகனங்களில் வந்து போக்குவரத்துக்கும், பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்படுத்தியது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. இதுதவிர போக்கு வரத்துக்கு இடையூறாக ரோட்டின் நடுவே உள்ள இரும்பு தடுப்புகள் மற்றும் அரசு சுவர்களில் விளம்பரம் செய்தது தொடர்பாக பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம் ஆகியோர் மீது மற்றொரு வழக்கு போடப் பட்டு உள்ளது.

மேலும் நெல்லை சந்திப்பு போலீஸ் நிலையத்தில் பாப்புலர் முத்தையா, கல்லூர் வேலாயுதம் மற்றும் கட்சி நிர்வாகிகள் மீது போக்குவரத் துக்கு இடையூறாக, அனுமதி யின்றி பேனர்கள் வைத்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

இந்த பிரச்சினை தொடர் பாக தூத்துக்குடியில் அ.தி.மு.க. (அம்மா அணி) நிர்வாகிகள் மீது நேற்று முன்தினம் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. 

Next Story